TET & PG TRB - TAMIL ELIGIBILITY TEST
தேர்வு - 40
1. கூற்று: உணவுக்காக வைத்திருந்த பணத்தில்
புத்தகங்களை வாங்கினார் ம.பொ.சி.
காரணம்: வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம்
கொண்டவர் ம.பொ.சி.
(அ) கூற்று சரி, காரணம் தவறு
(ஆ) கூற்று தவறு, காரணம் சரி
(இ) கூற்று, காரணம் இரண்டும் சரி
(ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு
2. பின்வரும் இதழ்களில் கு.ப.ரா பணியாற்றாத இதழைத் தெரிவு செய்க.
(அ) தமிழ்நிலம்
(ஆ) தமிழ்நாடு
(இ) பாரதமணி
ஈ) பாரததேவி
3. பொருந்தாத இணையைத் தெரிவு செய்க.
(அ) சிலப்பதிகாரம் – முத்தமிழ்க்காப்பியம்
(ஆ) சிலப்பதிகாரம், மணிமேகலை – இரட்டைக் காப்பியம்
(இ) மணிமேகலை – சீத்தலைச் சாத்தனார்
(ஈ) இளங்கோவடிகள் – சோழ மரபினர்
4. ‘கும்பகோணம்’ இவ்வூர்ப் பெயருக்கான மரூஉ ....................
(அ) கும்பம்
(ஆ) கோணம்
(இ) குணம்
(ஈ) குடந்தை
5. பொருத்துக.
1. மொழிவாரி ஆணையம் - அ)
தமிழக-கேரள எல்லை
2. படாஸ்கர் ஆணையம் -
ஆ) நீதிபதி வாஞ்சு
3. ஒரு நபர் ஆணையம் -
இ) தமிழக-ஆந்திர எல்லை
4. பசல்அலி ஆணையம் - ஈ)
கே.எம்.பணிக்கர்
(அ) 1-இ, 2-அ, 3-ஈ, 4-ஆ
(ஆ) 1-இ, 2-ஆ, 3-ஈ, 4-அ
(இ) 1-அ, 2-இ, 3-ஈ, 4-ஆ
(ஈ) 1-ஈ, 2-இ, 3-ஆ, 4-அ
6. பொருத்துக.
1. Consulate - அ) வணிகக்
குழு
2. Patent - ஆ) பாசனம்
3. Irrigation -இ) துணைத்
தூதரகம்
4. Guild - ஈ) காப்புரிமை
(அ) 1-ஈ, 2-இ, 3-அ, 4-ஆ
(ஆ) 1-ஈ, 2-இ, 3-ஆ, 4-அ
(இ) 1-இ, 2-ஈ, 3-அ,
4-ஆ
(ஈ) 1-இ, 2-ஈ, 3-ஆ,
4-அ
7. பெருங்குணத்துக் காதலாள் யார்?
(அ) மணிமேகலை
(ஆ) கவுந்தியடிகள்
(இ) கண்ணகி
(ஈ) இவர்களில் யாருமில்லை
8. அவந்தி நாட்டு மன்னன், மருத நாட்டு மன்னனுடன் தன்
வலிமையை நிலைநாட்ட போர்க்களத்தில் போரிடுகிறான்.
இந்நிகழ்வுக்கான புறத்திணை
(அ) வஞ்சித் திணை
(ஆ) காஞ்சித் திணை
(இ) வாகைத் திணை
(ஈ) தும்பைத் திணை
9. பொருத்துக.
1. புனல் - அ) மூங்கில்
2. வரை - ஆ) மீன்
3. மருள் - இ) நீர்
4. கயல் - ஈ) மயக்கம்
(அ) 1-ஈ, 2-இ, 3-ஆ, 4-அ
(ஆ) 1-ஈ, 2-இ, 3-அ, 4-ஆ
(இ) 1-இ, 2-ஈ, 3-ஆ,
4-அ
(ஈ) 1-இ, 2-அ, 3-ஈ, 4-ஆ
10. மூவேந்தர்களால் நாற்றிசையும் போற்ற வளர்க்கப்பட்டது தமிழ்.
இத்தொடரிலுள்ள தொகைச்சொற்ளின் எண்ணுப்பெயர்களுக்கான தமிழ் எண்கள்
(அ) ௫,௪
(ஆ) ௬,௨௦
(இ) ௩,௪
(ஈ) ௫, ௫௦
11. மூவேந்தர்களைப் பற்றிக் கூறும் காப்பியம்
(அ) மணிமேகலை
(ஆ) சிலப்பதிகாரம்
(இ) வளையாபதி
(ஈ) குண்டலகேசி
12. ஏழிசைகளைத் தெரிவு செய்க.
(அ) குரல், இராகம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்.
(ஆ) குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளரி, விளரி, தாரம்.
(இ) குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்.
(ஈ) குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாளம்.
13. பின்வருவனவற்றுள் வினைத்தொகையைத் தெரிவு செய்க.
(அ) வண்ணமும் சுண்ணமும்
(ஆ) அருங்கலம்
(இ) தூசும் துகிரும்
(ஈ) பயில்தொழில்
14. கூற்று : ம.பொ.சி எட்டாம் வகுப்புடன் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டார்.
காரணம்: குடும்ப வறுமையின் காரணமாகப் பள்ளியிலிருந்து நின்றுவிட்டார்.
(அ) கூற்று சரி, காரணம் தவறு
(ஆ) கூற்று தவறு, காரணம் சரி
(இ) கூற்று, காரணம் இரண்டும் சரி
(ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு
15. தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படும் தமிழகத்தின் வடக்கெல்லை,
தெற்கெல்லை
(அ) வேங்கடமலை, செங்கோட்டை
(ஆ) திருப்பதி, திருவிதாங்கூர்
(இ) சென்னை, கன்னியாகுமரி
(ஈ) வேங்கடமலை, குமரிமுனை
விடைக்குறிப்பு
1 - இ
2 - அ
3 - ஈ
4 - ஈ
5 - ஈ
6 - ஆ
7 - இ
8 - ஈ
9 - ஈ
10 - இ
11 - ஆ
12 - இ
13 - ஈ
14 - ஆ
15 - ஈ
கருத்துகள்
கருத்துரையிடுக