வியாழன், 13 நவம்பர், 2025

பள்ளி காலை வணக்கக் கூட்டச் செயல்பாடுகள்

13.11.2025, வியாழன்

திருக்குறள்

முதல்இலார்க்கு  ஊதியம்  இல்லை  மதலையாம்

சார்புஇலார்க்கு  இல்லை  நிலை

பொருள்

முதல் இல்லாத வணிகருக்கு வியாபாரத்தில் இலாபம் இல்லை. தாங்குகின்ற துணையான பெரியோர் இல்லாதவர்க்கு நிலைத்த வாழ்வில்லை.

பழமொழி

No smoke without fire.

நெருப்பில்லாமல் புகையாது.

பொன்மொழி

உண்மை பேசுவாயாக. சினத்தைத் தவிர்ப்பாயாக. உன்னிடம் இருப்பது மிகக் கொஞ்சமானாலும் யாசிக்கின்றவர்களுக்கு அதை ஈவாயாக. இம்மூன்றையும் செய்கிற ஒருவன் நற்கதி அடைவார். - கவுதம புத்தர்.

பொதுஅறிவு

அதிகாலை அமைதி நாடு என அழைக்கப்படும் நாடு எது?

கொரியா

இன்றைய முக்கியச் செய்திகள்

* சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளையும் இலவச உணவு வழங்கும் திட்டத்தை நவம்பர் 15ஆம் தேதி முதல்வர் தொடங்கிவைக்கிறார்.

* உதவிப் பேராசிரியர் பணிக்கான விண்ணப்பத்தைத் திருத்த இன்றுவரை அவகாசம்.

 பிரான்ஸ் அரசின் உயரிய விருதான செவாலியே விருது, கலை இயக்குநர் தோட்டாதரணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 நான் முதல்வன் திட்டத்தால் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் அதிக மாணவர்கள் தேர்ச்சி. 

* மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான பாராசூட் சோதனை வெற்றி.

TODAY'S HEADLINES

* The Chief Minister will launch a scheme to provide free meals to sanitation workers in Chennai on November 15.

* The deadline to revise the application for the post of Assistant Professor is today.

* The Chevalier Award, the highest award of the French government, has been announced for art director Thotadaharani.

* More students have passed the examination conducted by the Union Public Service Commission due to the Naan Multhavan project.

* Parachute test for Gaganyaan mission to send humans into space successful.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எட்டாம் வகுப்பு - தமிழ்

  அரையாண்டுத் தேர்வு டிசம்பர் - 2025 திருவண்ணாமலை மாவட்டம் உத்தேச விடைக்குறிப்பு PDF வடிவில் வினாத்தாள் DOWNLOAD HERE விடைக்குறிப்பு DOWNLOA...