12.06.2023, திங்கள்
திருக்குறள்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
பொருள்
எழுத்துகள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.
பழமொழி
God is love
அன்பே கடவுள்.
பொன்மொழி
வெற்றிபெற மூன்று வழிகள்.
மற்றவர்களைவிட அதிகமான தெரிந்துகொள்ளுங்கள்.
மற்றவர்களைவிட அதிகமாக பணியாற்றுங்கள்.
மற்றவர்களைவிட குறைவாக எதிர்பாருங்கள்.
பொது அறிவு
இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை யார்?
சுவாமிநாதன்.
இன்றைய செய்திகள்
* தமிழகத்தில் 6 முதல் 12 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. முதல் நாளிலியே புத்தகம், குறிப்பேடுகள் வழங்க ஏற்பாடு.
* 2025 ஆம் ஆண்டுக்குள் குழந்தைத் தொழிலாளர் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதே அரசின் இலக்கு - முதல்வர் பேச்சு.
* இளநிலை கால்நடை மருத்துவப்படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
* குஜராத்தில் வரும் ஜீன் 15 ஆம் தேதி கரையைக் கடக்கிறது பெப்பர்ஜாய் புயல்.
* மகளிர் ஜீனியர் ஹாக்கி ஆசிய கோப்பையை இந்தியா வென்று அசத்தியுள்ளது.
Today's Headlines
* Schools in Tamil Nadu opened today for students from
classes 6 to 12. Book and notebooks will be provided on the first day itself.
* Govt's goal is to create child labor free Tamil Nadu by 2025 - Chief Minister's speech.
* You can apply for junior veterinary course from today.
* Cyclone Pepper-joy makes landfall in Gujarat on 15th Jean.
* India stunned by winning the Women's Junior Hockey Asia Cup.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக