பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 12.12.2023, செவ்வாய்
12.12.2023, செவ்வாய்
திருக்குறள்
பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.
பொருள்
நல்லவர் ஒருவரின் நட்பைக் கைவிடுவது, பலரைப் பகைத்துக் கொள்வதனை விடப் பன்மடங்கு தீமை உடையதாகும்.
பழமொழி
HEARTY LAUGH DISPELS DISEASE.
வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்.
பொன்மொழி
வன்முறை என்பது
மோசமானதுதான். ஆனால்,
அடிமைத்தனம் வன்முறையைக்
காட்டிலும் மோசமானது. - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.
பொதுஅறிவு
2023 ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல் எது?
நீர்வழிப் படூஉம்.
இன்றைய முக்கியச் செய்திகள்
💥 ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செல்லும். உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.
💥 30 லட்சம் குடும்பங்களுக்கு ரூபாய் 6000 புயல் நிவாரண நிதியாக கிடைக்கும்.
💥 கொசஸ்தலை ஆற்றின் வழியாக கடலில் 20 கி.மீ வரை எண்ணெய்க் கழிவுகள் பரவின.
💥 சென்னை வெள்ளம்போல எதிர்காலத்திலும் வானிலை நிகழ்வுகள் மோசமாக இருக்கும். வானிலை நிபுணர்கள்.
💥 திருவள்ளுவர் மாவட்டத்தில் 915 ஏரிகள் நிரம்பின.
💥 சென்னையில் கிராண்ட் மாஸ்டர் செஸ் ஷாம்பியன்ஷிப் போட்டிக்கான தேதி அறிவிப்பு.
TODAY'S HEADLINES
💥 The special status of Jammu and Kashmir will be revoked. Supreme Court Judgment.
💥 30 lakh families will get Rs 6000 as storm relief funds.
💥 The oil spill spread up to 20 km into the sea through the Kosasthalai River.
💥 Weather events like Chennai floods will continue to be bad in future. Meteorologists.
💥 915 lakes were filled in Tiruvalluvar district.
💥 Date Announcement for Grand Master Chess Championship in
Chennai.
கருத்துகள்
கருத்துரையிடுக