பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 02.01.2024, செவ்வாய்
02.01.2024, செவ்வாய்
திருக்குறள்
செய்க பொருளைச், செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்.
பொருள்
பொருளைத் தேடிச் சேர்த்தல் வேண்டும். அது பகைவரின் செறுக்கை அறுக்கும் உறுதியான படைக்கலம். அதனைவிடக் கூர்மையான கருவி வேறொன்றுமில்லை.
பழமொழி
TAKE TIME BY THE FORELOCK.
காலத்தே கடமையைச் செய்.
பொன்மொழி
வேதனைகளை ஜெயித்து உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு.
பொதுஅறிவு
பிரதமர் நரேந்திரமோடி மாதந்தோறுமு் உரையாற்றும் வானொலி நிகழ்ச்சியின் பெயர் என்ன?
மனதின் குரல்
இன்றைய முக்கியச் செய்திகள்
💥 எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
💥 நெல்லை மற்றும் கன்னியாகுமரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.
💥 உயர்மட்ட சுனாமி எச்சரிக்கையைத் திரும்பப் பெற்றது ஜப்பான்.
💥 ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலிருந்து டேவிட் வார்னர் ஓய்வு.
TODAY'S HEADLINES
💥 Exposat satellite successfully launched into space.
💥 Chance of heavy rain in Nellai and Kanyakumari today.
💥 Japan withdraws
high-level tsunami warning.
💥 David warner retires from one day cricket.
கருத்துகள்
கருத்துரையிடுக