பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 04.01.2024, வியாழன்
04.01.2024, வியாழன்
திருக்குறள்
ஒறுத்தார்க் கொருநாளை இன்பம், பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ்
பொருள்
பிறர் செய்யும் தீமையைப் பொறுத்துக்கொள்ளாது தண்டித்தவர்க்கு ஒரு நாள் மட்டுமே இன்பம் கிட்டும். அதனைப் பொறுத்துக் கொண்டவரின் புகழ், உலகம் உள்ளவரைக்கும் நிலைத்து நிற்கும்.
பழமொழி
AS IS THE MOTHER, SO IS HER DAUGHTER.
தாயைப் போலப் பிள்ளை, நூலைப் போல சேலை.
பொன்மொழி
கடந்த காலத்தை நினைத்து வாழ வேண்டாம். எதிர்காலத்தை நினைத்து கனவும் காண வேண்டாம். இந்த தருணத்தை மனதில் கவனித்திருங்கள். - புத்தர்.
பொதுஅறிவு
பொதுப் போக்குவரத்தை இலவசமாக வழங்கும் நாடு எது?
லக்சம்பர்க்
இன்றைய முக்கியச் செய்திகள்
💥 47 வது சென்னை புத்தகக் கண்காட்சி நேற்று தொடங்கியது. ஜனவரி 21 ஆம் தேதி வரை நடைபெறும்.
💥 ஜனவரி 13 ஆம் தேதி முதல் சென்னை சங்கமம் 18 இடங்களில் நடைபெறும் என அமைச்சர் தகவல்.
💥 மின் உற்பத்தி பாதிப்பு காரணமாக தமிழகத்துக்கு ஒதுக்கப்படும் மின்சாரம் குறைப்பு.
💥 நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல்.
TODAY'S HEADLINES
💥 The 47th Chennai Book Fair started yesterday. It will be held till 21st January.
💥 The minister informed that the Chennai Sangam will be held at 18 places from January 13.
💥 Reduction in power allocated to Tamil Nadu due to damage to power generation.
💥 Heavy rain is likely to occur in Nilgiris and Theni
districts today, according to the Meteorological Department.
கருத்துகள்
கருத்துரையிடுக