பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 07.02.2024, புதன்
07.02.2024, புதன்
திருக்குறள்
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னும் செருக்கு
பொருள்
முயற்சி எனப்படும் உயர்ந்த குணத்தில்தான் பிறர்க்கு உதவுதல் என்னும் மேன்மை நிலைபெற்றிருக்கிறது.
பழமொழி
A single swallow cannot make a summer
தனிமரம் தோப்பாகாது
பொன்மொழி
அனைவரையும் நேசி. சிலரை மட்டும் நம்பு. ஒருவரைப் பின்பற்று. ஆனால் ஒவ்வொருவரிடம் இருந்தும் கற்றுக்கொள். - லெனின்.
பொதுஅறிவு
புகழ்பெற்ற கிராமி விருது வென்ற முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியவர் யார்?
ஜான் பென்னி குயிக்.
இன்றைய முக்கியச் செய்திகள்
* வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 4 நாட்கள் அறிவியல் கண்காட்சி.
* தமிழகத்தில் மின்சாரத்தைச் சேமிப்பதற்கான தானியங்கி கட்டுப்பாட்டு கருவி அறிமுகம்.
* இலங்கை விடுதலை செய்த 12 தமிழக மீனவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
* இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி.
* தமிழகத்தில் பிப்ரவரி 10 - 12 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு.
TODAY'S HEADLINES
* 4 Days Science Fair at Thiruvalluvar University, Vellore.
* Introduction of automatic control device for saving electricity in Tamil Nadu.
* 12 Tamil Nadu fishermen freed by Sri Lanka were sent to their native places.
* Indian team qualified for the finals of the Youth Cricket
World Cup.
* Rain chance on February 10-12 in Tamilnadu.
கருத்துகள்
கருத்துரையிடுக