வியாழன், 8 பிப்ரவரி, 2024

பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 08.02.2024, வியாழன்

 08.02.2024, வியாழன்

திருக்குறள்

தேரான்  பிறனைத்  தெளிந்தான்  வழிமுறை

தீரா  இடும்பை  தரும்.

பொருள்

மற்றவனை ஆராய்ந்து நம்பித் தெளிவது தன் சந்ததிக்கும் நீங்காத துன்பத்தைத் தரும்.

பழமொழி

He that hath been bitten by a snake is afraid of rope.

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.

பொன்மொழி

தனக்குத் தெரிந்ததை தெரியும் என்றும்

தெரியாததை தெரியாது என்றும்

அறிவதுதான் அறிவு - கன்பூசியஸ்.

பொதுஅறிவு

இந்திய இராணுவத்தின் துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டவர் யார்?

உபேந்திர விவேதி.

இன்றைய முக்கியச் செய்திகள்

* ஸ்பெயின் பயணம் மூலம் ரூபாய் 3440 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்து. தமிழக முதல்வர் அறிக்கை.

* மக்களவைத் தேர்தல் வாக்காளர் பட்டியலில் 1.66 கோடி பெயர் நீக்கம்.

* உதகை மண் சரிந்து விபத்துக்குள்ளானோர் குடும்பத்துக்கு நிவாரண நிதி அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.

* பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றிய முதல் மாநிலமானது உத்தரகாண்ட்.

* விளையாட்டில் சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

TODAY'S HEADLINES

* Contract signed for Rs 3440 Crores through Spain trip. Tamil Nadu Chief Minister's Statement.

* Deletion of 1.66 crore names from the Lok Sabha election voter list.

* Chief Minister Stalin announced a relief fund for the families of the victims of the landslide.

* Uttarakhand was the first state to enact a Common Civil Code.

* Tamil Nadu has been selected as the best state in sports. Minister Udayanidhi Stalin.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக