வெள்ளி, 9 பிப்ரவரி, 2024

பள்ளி - காலை வணக்கக்கூட்ட செயல்பாடுகள் - 09.02.2024, வெள்ளி

  09.02.2024, வெள்ளி

திருக்குறள்

நிலத்தில்  கிடந்தமை  கால்காட்டும்  காட்டும்

குலத்தில்  பிறந்தார்வாய்ச்  சொல்

பொருள்

நிலத்தின் இயல்பை அதில் தோன்றிய தாவரம் அறிவிக்கும். அதுபோல நல்ல குடியில் பிறந்தவரின் இயல்பை அவர்கள் வாய்மொழியே காட்டி விடும்.

பழமொழி

Familiarity breeds contempt.

பழகப் பழகப் பாலும் புளிக்கும்.

பொன்மொழி

உலகில் உள்ள மக்கள் உன்னைப் புகழ்ந்தாலும் சரி; இகழ்ந்தாலும் சரி; நீ உண்மை என்னும் பாதையிலிருந்து அணுவளவும் பிறழாமல் கவனமாக இருக்க வேண்டும். - சுவாமி விவேகானந்தர்.

பொதுஅறிவு

சூரிய குடும்பத்தைக் கண்டறிந்தவர் யார்?

கோபர் நிக்கஸ்

இன்றைய முக்கியச் செய்திகள்

* 33 மாதங்களில் ரூபாய் 8.65 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு. தமிழக அரசு தகவல்.

* பிப்ரவரி 17-இல் விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி. எஃப் -14 ராக்கெட்.

* தமிழகத்தில் 6.80 லட்சம் ஈரநிலப் பறவைகள் உள்ளதாக தமிழக அரசு தகவல்.

* பொதுத்தேர்வு பணிகளில் தனியார் பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது. அரசுத் தேர்வுகள் இயக்ககம்.

* தமிழகத்தில் இன்று 1.16 லட்சம் இடங்களில் குடற்புழு நீக்க முகாம்.

TODAY'S HEADLINES

* 8.65 lakh crore investments attracted in 33 months. Tamil Nadu Government Information.

* GSLV launches on February 17 F-14 rocket.

* Tamil Nadu government information that there are 6.80 lakh wetland birds in Tamil Nadu.

* Private school teachers should not be involved in public examination work. Directorate of Government Examinations.

* Deworming camp in 1.16 lakh places in Tamil Nadu today.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக