TNPSC - பொதுத்தமிழ் - Group IV, II (தேர்வு - 1)
புதிய பாடத்திட்டத்தின்படி உருவாக்கப்பட்ட வினாக்கள்
நாள்தோறும் பத்து வினாக்கள்
படித்துப் பயன்பெறுங்கள்
தேர்வு - 1
1. பின்வருவனவற்றுள் புறச்சுட்டைத் தெரிவு செய்க.
(A) இவன்
(B) அவன்
(C) உவன்
(D) அவ்வானம்
2. திங்கள், மஞ்சள், காக்கை, மண்டபம், சந்தனம், அம்பு
– இவற்றில் இன எழுத்து அல்லாத சொல் எது ?
(A) காக்கை
(B) அம்பு
(C) மஞ்சள்
(D) திங்கள்
3. ‘ஊ’ என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் என்ன?
(A) ஊதல்
(B) ஊக்கம்
(C) ஊடல்
(D) இறைச்சி
4. மால் - தமிழாக்கம் தருக.
(A) நாளங்காடி
(B) அல்லங்காடி
(C) பல்லங்காடி
(D) பெரியங்காடி
5. செல் - வினையாலணையும் பெயராக மாற்றுக.
(A) சென்றான்
(B) செல்லல்
(C) சென்றவன்
(D) செல்லுதல்
6. சந்திப்பிழையற்ற தொடரைத் தெரிவு செய்க.
(A) காகத்திற்கு செவிதுளைகள் இறகுகளால் மூடப்பட்டிருக்கும்.
(B) காகத்திற்குச் செவிதுளைகள் இறகுகளால் மூடப்பட்டிருக்கும்.
(C) காகத்திற்கு செவித்துளைகள் இறகுகளால் மூடபட்டிருக்கும்.
(D) காகத்திற்குச் செவித்துளைகள் இறகுகளால் மூடப்பட்டிருக்கும்.
7. ஊர்ப்பெயரின் மரூஉவைத் தெரிவு செய்க. புதுக்கோட்டை
(A) புதுவை
(B) கோட்டை
(C) புரடை
(D) புதுகை
8. உவமைக்குப் பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க.
“கிணற்றுத்தவளை போல”
(A) தெளிவு
(B) அறியாமை
(C) பிரியாமை
(D) எளிதாக
9. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தெரிவு செய்க.
குரை - குறை
(A) அளவு - மிகை
(B) ஒலி – சுருக்கு
(C) சத்தம் - பெரிது
(D) குலை – வரை
10. பிழைகளற்ற தொடரைத் தெரிவு செய்க.
(A) கூரை போட்டான்.
(B) கூறை வேய்ந்தான்
(C) கூரை மூடினான்.
(D) கூரை வேய்ந்தான்.
Answers
1 - D
2 - A
3 - D
4 - C
5 - C
6 - D
7 - D
8 - B
9 - B
10 - D
கருத்துகள்
கருத்துரையிடுக