TNPSC - பொதுத்தமிழ் - Group IV, II (தேர்வு - 2)

 புதிய பாடத்திட்டத்தின்படி உருவாக்கப்பட்ட வினாக்கள்

நாள்தோறும் பத்து வினாக்கள்

படித்துப் பயன்பெறுங்கள்

தேர்வு - 2

1. ‘பூக்காரி’ என்னும் நூலை இயற்றியவர் யார்?

(A) பெருஞ்சித்திரனார்

(B) முடியரசன்

(C) தாராபாரதி

(D) பட்டுக்கோட்டை

2. கூற்று 1 : பெயரெச்சத்தில் வல்லினம் மிகாது.

கூற்று 2     : உம்மைத்தொகையில் வல்லினம் மிகும்.

கூற்று 3     : உகர ஈற்று வினையெச்சத்தில் வல்லினம் மிகாது.

கூற்று 4    : படி என்னும் சொல்லின்பின் வல்லினம் மிகும்.

(A) கூற்று 1, 2, 3, 4 சரி

(B) கூற்று 1, 2, 3, 4 தவறு

(C) கூற்று 1, 3 சரி கூற்று; 2, 4 தவறு

(D) கூற்று 1, 3 தவறு கூற்று; 2, 4 சரி

3. மரபுத் தொடருக்கான பொருள் அறிக.

பூசி மொழுகுதல்.

(A) மறைத்தல்

(B) வெளிப்படுத்துதல்

(C) சரிப்படுத்துதல்

(D) காலம் தாழ்த்துதல்

4. வடக்குத் திசையில் தலை வைத்துப் படுக்கக்கூடாது எனக்கூறும் நூல்

(A) நாலடியார்

(B) ஆசாரக்கோவை

(C) முதுமொழிக்காஞ்சி

(D) பழமொழி நானூறு

5. முதுமொழிக்காஞ்சி  - இதில் காஞ்சி என்பது எதனைக் குறிக்கிறது?

(A) அறிவுரை

(B) நிலையாமை

(C) திணை

(D) கோவை

6. ‘ஆர்கலி உலகத்து மக்கட்கெல்லாம்’ எனத் தொடங்கும் செய்யுள்களைக் கொண்ட நூலின் பெயர் என்ன?

(A) களவழி நாற்பது

(B) திணைமாலை ஐம்பது

(C) முதுமொழிக்காஞ்சி

(D) ஆசாரக்கோவை

7. பொருளமைப்பில் திரிகடுகத்தைப் போன்று உள்ள பதினெண்கீழ்க்கணக்கு நூல் எது?

(A) இனியவை நாற்பது

(B) ஏலாதி

(C) பழமொழி நானூறு

(D) முதுமொழிக்காஞ்சி

8. திரிகடுகத்தில் நன்மை தருபவை எத்தனை பாடல்களில் கூறப்பட்டுள்ளன?

(A) 66

(B) 56

(C) 46

(D) 76

9. பஞ்சம் காரணமாக மதுரையில் தங்கியிருந்த சமண முனிவர்களே நாலடியாரை இயற்றினார்கள் என்பது செய்தி. எத்தனை சமண முனிவர்கள் மதுரையில் தங்கியிருந்தார்கள்?

(A) 400

(B) 4000

(C) 6000

(D) 8000

10. பொருத்துக.

(அ) துரகதம்     - 1. அலை

(ஆ) தரங்கம்     - 2. குதிரை

(இ) அனிலம்     - 3. முதலை

(ஈ) கரா                 - 4. காற்று

(A) 2, 3, 1, 2

(B) 2, 1, 4, 3

(C) 3, 4, 2, 1

(D) 3, 2, 1, 4

ANSWERS

1 - A

2 - C

3 - A

4 - B

5 - D

6 - C

7 - A

8 - A

9 - D

10 - B


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்