TNPSC - பொதுத்தமிழ் - Group IV, II (தேர்வு - 6)

புதிய பாடத்திட்டத்தின்படி உருவாக்கப்பட்ட வினாக்கள்

நாள்தோறும் பத்து வினாக்கள்

படித்துப் பயன்பெறுங்கள்

தேர்வு - 6

1. ஓடுதல் இத்தொழிற்பெயரை வினையெச்சமாக மாற்றுக.

(A) ஓடி

(B) ஓடு

(C) ஓடிய

(D) ஓட்டு

2. தவறான தொடரைத் தெரிவு செய்க.

(A) சாலப் பேசினார்

(B) எனக் கூறினார்

(C) இனி காண்போம்

(D) தாமரைக்கை

3. வரத்துக்காரன் என்ற வட்டாரச்சொல்லுக்கான பொருள் என்ன?

(A) தெரியாதவன்

(B) தெரிந்தவன்

(C) புதியவன்

(D) வல்லவன்

4. வேர்ச்சொல் காண்க.  ஞாலம்

(A) ஞல்

(B) ஞாள்

(C) ஞால்

(D) ஞாலு

5. அட்டமாசித்திகள் - இதில் அட்டம் என்பதன் பொருள்

(A) ஒன்பது

(B) பதினெட்டு

(C) பன்னிரண்டு

(D) எட்டு

6. ‘சோ’ என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்கான பொருள்

(A) சோர்வு

(B) மதில்         

(C) சோகம்

(D) உயர்வு

7. பொருந்தாத இணையைத் தெரிவு செய்க.

(A) விளை - உண்டாக்குதல்

(B) விழை - விரும்பு

(C) இளை - செடி

(D) இழை - நுலிழை

8. ‘வெய்யோன்’ என்பதன் தவறான பொருளைத் தெரிவு செய்க.

(A) பகலவன்

(B) சந்திரன்

(C) ஞாயிறு

(D) ஆதவன்

9. செங்கல்பட்டு என்பதன் மரூஉ

(A) செங்கை

(B) செங்கம்

(C) செங்கல்

(D) செட்டு

10. இரு பொருள் தருக. கோ

(A) மதி - நிலவு

(B) அரசன் - பசு

(C) வேந்தன் - மாடு

(D) வனம் - காடு

விடைகள்

1 - A

2 - C

3 - C

4 - C

5 - D

6 - B

7 - C

8 - B

9 - A

10 - B

இதனைப் போன்று வினாக்கள் தொடர்ந்து படிக்க 

தமிழ்ச்சிட்டு TNPSC புலனக்குழுவில் இணையவும்.

தமிழ்ச்சிட்டு TNPSC புலனக்குழு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்