PG TRB - TAMIL ELIGIBILITY TEST

தேர்வு - 2

1. பாவாணர் நூலகத்தை உருவாக்கியவர்

(அ) திரு.வி.க

(ஆ) இரா.இளங்குமரனார்

(இ) பாவாணர்

(ஈ) தமிழழகனார்

2. உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு

(அ) சிங்கப்பூர்

(ஆ) மலேசியா

(இ) தாய்லாந்து

(ஈ) இந்தியா

3. மொழிஞாயிறு என்றழைக்கப்பட்டவர்

(அ) திரு.வி.க

(ஆ) இரா.இளங்குமரனார்

(இ) பாவாணர்

(ஈ) தமிழழகனார்

4. பொருத்துக.

1. விகுதி பெற்ற தொழிற்பெயர்- (அ) சுடு

2. எதிர்மறைத் தொழிற்பெயர் - (ஆ) கேடு

3. முதனிலைத் தொழிற்பெயர் - (இ) நடவாமை

4. முதனிலைத் திரிந்த தொழிற்பெயர் - (ஈ) வாழ்க்கை

(அ) 1-, 2-, 3-, 4-

(ஆ) 1-, 2-, 3-, 4-

(இ) 1-, 2-, 3-, 4-

(ஈ) 1-, 2-, 3-, 4-

5. ஓஒதல் வேண்டும்’ இதில் அளபெடை மொழிக்கு ……….. வந்துள்ளது.

(அ) இடையில்

(ஆ) முதலில்

(இ) கடையில்

(ஈ) முற்றாக

6. ஒற்றளபெடைக்குரிய எழுத்துகள்

(அ) ங், ஞ், ண், ந், ம், ன், ய், ர், வ், ய், ல், ள், ஃ.

(ஆ) ங், ஞ், ண், ந், ம், ன், வ், ல், ள், ஃ.

(இ) ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல், ள்.

(ஈ) ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல், ள், ஃ.

7. பொருத்துக.

1. தனிமொழி - (அ) எட்டு

2. தொடர்மொழி - (ஆ) கண்

3. பொதுமொழி - (இ) மலர் சென்றாள்

4. அளபெடை - (ஈ) நீண்டு ஒலித்தல்

(அ) 1-, 2-, 3-, 4-

(ஆ) 1-, 2-, 3-, 4-

(இ) 1-, 2-, 3-, 4-

(ஈ) 1-, 2-, 3-, 4-

8. சார்பெழுத்துகள் ………… வகைப்படும்.

(அ) 12

(ஆ) 6

(இ) 10

(ஈ) 30

9. சண்முகசுந்தரம் என்னும் இயற்பெயரைக் கொண்டவர்

(அ) தமிழழகனார்

(ஆ) இளங்குமரனார்

(இ) க.அப்பாத்துரை

(ஈ) பெருஞ்சித்திரனார்

10. தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும்’ என்னும் அடியில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சிறுமலை என்னும் ஊரைக் குறிப்பிடும் காப்பியம்

(அ) சிலப்பதிகாரம்

(ஆ) மணிமேகலை

(இ) பெரியபுராணம்

(ஈ) கம்பராமாயணம்

விடைக்குறிப்பு

1 - ஆ

2 - ஆ

3 - இ

4 - இ

5 - அ

6 - ஈ

7 - ஈ

8 - இ

9 - அ

10 - அ

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்