TET & PG TRB - TAMIL ELIGIBILITY TEST
தேர்வு - 27
01. மீளாத் துயர்தரினும் வித்துவக் கோட்டம்மா!
– இவ்வடியில் வித்துவக்கோட்டம்மா என்பது
(அ) வினைமுற்று
(ஆ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
(இ) பெயரெச்சம்
(ஈ) விளித்தொடர்
02. விசும்பு, இசை, ஊழி இச்சொற்கள் உணர்த்தும் பொருள்கள் முறையே
(அ) காற்று, ஒசை, கடல்
(ஆ) மேகம், இடி, ஆழம்
(இ) வானம், பேரொலி, யுகம்
(ஈ) வானம், காற்று, காலம்
03. தென்னை மரங்கள் அடர்ந்துள்ள பகுதி ...............
(அ) தென்னந்தோட்டம்
(ஆ) தென்னந்தோப்பு
(இ) தென்னங்காடு
(ஈ) தென்னம்பூங்கா
04. E-Circular என்ற சொல்லின் தமிழாக்கம்
(அ) மின்சுற்று
(ஆ) மின்சுற்றறிக்கை
(இ) மின்னாற்றல்
(ஈ) மின்னியக்கப்பாதை
05. பார்ப்பன் இச்சொல்லுக்கான வேர்ச்சொல்
(அ) பா
(ஆ) பார்
(இ) பார்த்த
(ஈ) பார்த்தல்
06. தோன்று – இச்சொல்லை வினைமுற்றாக மாற்றுக.
(அ) தோன்றுதல்
(ஆ) தோன்றா
(இ) தோன்றி
(ஈ) தோன்றினான்.
07. எதைப் போற்றிக் கற்க வேண்டுமென செய்குதம்பிப் பாவலர் குறிப்பிடுகிறார்?
(அ) அருள்
(ஆ) கல்வி
(இ) வீரம்
(ஈ) கலை
08. கீதாஞ்சலி என்னும் நூலைப் படைத்தவர்
(அ) கலீல் கிப்ரான்
(ஆ) தாகூர்
(இ) ந.முத்துசாமி
(ஈ) கா.ப. செய்குதம்பிப் பாவலர்
09. திருவிளையாடற்புராணம் ................. காண்டங்களையும் ................. படலங்களையும் கொண்டுள்ளது.
கோடிட்ட இடங்களை தமிழெண்களால் நிரப்புக.
(அ) ௩, ௬௪
(ஆ) ௫, ௬௪
(இ) ௧, ௧௦
(ஈ) ௨, ௬
10. ‘இது செய்வாயா?’ என வினவியபோது, ‘நீயே செய்’ என்று கூறுவது
(அ) வினா எதிர்வினாதல் விடை
(ஆ) நேர் விடை
(இ) ஏவல் விடை
(ஈ) இனமொழி விடை
11. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது
– இக்குறட்பாவில் பயின்றுவந்துள்ள பொருள்கோள்
(அ) ஆற்றுநீர்ப் பொருள்கோள்
(ஆ) கொண்டுகூட்டுப் பொருள்கோள்
(இ) முறை நிரல்நிறைப் பொருள்கோள்
(ஈ) எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்
12. பொருத்துக.
1. எழுவாய்த் தொடர் - (அ) அருணா ஓடாதே!
2. பெயரெச்சத் தொடர் - (ஆ) ஓடி வந்தாள்.
3. வினையெச்சத் தொடர் - (இ) ஓடிய அருணா.
4. விளித்தொடர் - (ஈ) அருணா ஓடினாள்.
(அ) 1-ஈ, 2-இ, 3-ஆ, 4-அ
(ஆ) 1-ஈ, 2-இ, 3-அ, 4-ஆ
(இ) 1-இ, 2-ஈ, 3-ஆ, 4-அ
(ஈ) 1-இ, 2-ஈ, 3-அ, 4-ஆ
விடைக்குறிப்பு
1 - அ
2 - இ
3 - இ
4 - ஆ
5 - ஆ
6 - ஈ
7 - ஆ
8 - ஆ
9 - அ
10 - இ
11 - இ
12 - அ
கருத்துகள்
கருத்துரையிடுக