TET & PG TRB - TAMIL ELIGIBILITY TEST

 தேர்வு - 26

01. கூற்று: எதுவுமேயில்லாத பெருவெளியில்  அண்டத் தோற்றத்துக் காரணமான கரு பேரொலியுடன் தோன்றியது.

காரணம்: இதுவே பெருவெடிப்புக் கொள்கை என்று அறிவியலாளர்களால் கூறப்படுகிறது.

(அ) கூற்று சரி, காரணம் தவறு

(ஆ) கூற்று தவறு, காரணம் சரி

(இ) கூற்று, காரணம் இரண்டும் சரி

(ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு

02. தலைஇய’ இலக்கணக்  குறிப்பு தருக.

(அ) செய்யுளிசை அளபெடை

(ஆ) இன்னிசை அளபெடை

(இ) சொல்லிசை அளபெடை

(ஈ) ஒற்றளபெடை

03. ”வாடா இராசா, வாடா கண்ணா” என்று தன் மகளைப் பார்த்துத் தாய் அழைப்பது .............. வழுவமைதி.

(அ) திணை

(ஆ) பால்

(இ) இட

(ஈ) கால

04. இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் ஒரு காரணம் கருதி பிழையன்று என ஏற்றுக்கொள்ளப்பட்டது

(அ) வழு நிலை

(ஆ) வழா நிலை

(இ) வழுவமைதி

(ஈ) எதுவுமில்லை

05. திணையின் உட்பிரிவு ...................

(அ) பால்

(ஆ) இடம்

(இ) காலம்

(ஈ) மரபு

06. எட்டுத்தொகை நூல்களுள் பண்ணோடு பாடப்பட்ட நூல்

(அ) அகநானூறு

(ஆ) பரிபாடல்

(இ) நற்றிணை

(ஈ) முல்லைப்பாட்டு

07. பொருத்துக.

1. வீரன் - (அ) பெண்பால்

2. மகள் - (ஆ) ஒன்றன்பால்

3. மலை - (இ) பலவின்பால்

4. பசுக்கள் - (ஈ) ஆண்பால்

(அ) 1-ஈ, 2-ஆ, 3-, 4-

(ஆ) 1-, 2-, 3-, 4-

(இ) 1-, 2-, 3-, 4-

(ஈ) 1-ஈ, 2-அ, 3-ஆ, 4-இ

08. உயர்திணைக்குரிய பால்கள்

1. ஆண்பால்

2. பெண்பால்

3. பலர்பால்

4. ஒன்றன்பால்

5. பலவின்பால்

(அ) 1, 3, 5

(ஆ) 1, 2, 3

(இ) 1, 3, 4

(ஈ) 1, 4, 5

09. அஃறிணைக்குரிய பால்கள்

1. ஆண்பால்

2. பெண்பால்

3. பலர்பால்

4. ஒன்றன்பால்

5. பலவின்பால்

(அ) 1,2

(ஆ) 1, 3

(இ) 4, 5

(ஈ) 2, 4

10. பிரித்து எழுதுக. மூவிடம்

(அ) மூ+இடம்

(ஆ) மூன்று+இடம்

(இ) மூ+விடம்

(ஈ) மூணு+இடம்

11. பெப்பர் என்ற இயந்திர மனிதனை உருவாக்கிய நாடு

(அ) அமெரிக்கா

(ஆ) சீனா

(இ) ஜப்பான்

(ஈ) ரஷ்யா

12. பெருமாள் திருமொழி இடம் பெற்றுள்ள தொகுப்பு

(அ) நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம்

(ஆ) பன்னிரு திருமுறைகள்

(இ) எட்டுத்தொகை

(ஈ) பத்துப்பாட்டு

விடைக்குறிப்பு

1 - இ

2 - இ

3 - ஆ

4 - இ

5 - அ

6 - ஆ

7 - ஈ

8 - ஆ

9 - இ

10 - ஆ

11 - இ

12 - அ


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்