TET & PG TRB - TAMIL ELIGIBILITY TEST
தேர்வு - 28
01. வெளிப்படை விடைகள்
(அ) இனமொழி விடை, உற்றது உரைத்தல் விடை, உறுவது கூறல் விடை
(ஆ) சுட்டு விடை, நேர் விடை, மறை விடை
(இ) சுட்டு விடை, நேர் விடை, ஏவல் விடை
(ஈ) வினா எதிர்வினாதல் விடை, ஏவல் விடை, நேர் விடை
02. செய்குதம்பிப் பாவலருக்கு மணிமண்டபம் அமைந்துள்ள இடம் ..............
(அ) ஆரல்வாய்மொழி
(ஆ) கன்னியாகுமரி
(இ) இடலாக்குடி
(ஈ) கொல்லிமலை
03. கபிலரின் நண்பராக விளங்கியவர் ...................
(அ) குலேச பாண்டியன்
(ஆ) இடைக்காடனார்
(இ) பரஞ்சோதி முனிவர்
(ஈ) இறைவன்
04. பொருத்துக.
1. தமர் - (அ) மகிழ்ச்சி
2. உவகை - (ஆ) உறவினர்
3. தார் - (இ) தலை
4. முடி - (ஈ) மாலை
(அ) 1-ஆ, 2-இ, 3-ஈ, 4-அ
(ஆ) 1-ஈ, 2-இ, 3-அ, 4-ஆ
(இ) 1-இ, 2-ஈ, 3-ஆ, 4-அ
(ஈ) 1-ஆ, 2-அ, 3-ஈ, 4-இ
05. கூற்று 1: ‘சதம்’ என்றால் நூறு என்று பொருள்.
கூற்று 2: செய்குதம்பிப் பாவலர் ஒரு சதாவதானி ஆவார்.
(அ) கூற்று 1 சரி; கூற்று 2 தவறு.
(ஆ) கூற்று 1 தவறு; கூற்று 2 சரி.
(இ) கூற்று 1, 2 சரி.
(ஈ) கூற்று 1, 2 தவறு.
06. செய்குதம்பிப் பாவலரின் நீதிவெண்பா கருத்துப்படி மருளை ............... வேண்டும்.
(அ) அகற்ற
(ஆ) பெருக்க
(இ) அழகாக்க
(ஈ) கூட்ட
07. ‘தோண்டும் அளவு ஊறும் நீர்போலக் கற்கும் அளவு அறிவு சுரக்கும்’ எனக் கூறும் நூல் எது?
(அ) நீதிவெண்பா
(ஆ) பெருமாள் திருமொழி
(இ) கம்பராமாயணம்
(ஈ) திருக்குறள்
08. ‘இங்கு நகரப் பேருந்து நிற்குமா?’ என்று வழிப்போக்கர் கேட்பது ............... வினா ஆகும்.
(அ) ஏவல் வினா
(ஆ) அறி வினா
(இ) ஐய வினா
(ஈ) அறியா வினா
09. ‘எனக்கு எழுதித் தருகிறாயா?’ என்ற வினாவிற்கு, ‘எனக்கு யார் எழுதித் தருவார்கள்?’ என்று விடையளிப்பது ................. விடை ஆகும்.
(அ) இனமொழி
(ஆ) சுட்டு
(இ) மறை
(ஈ) வினா எதிர் வினாதல்
10. ‘ஆடத் தெரியுமா?’ எனும் வினாவிற்கு ‘தெரியாது‘ என விடையளிப்பது .......... விடை.
(அ) சுட்டு
(ஆ) இனமொழி
(இ) ஏவல்
(ஈ) மறை
11. பொருத்துக.
1. அருள் - (அ) மயக்கம்
2. மருள் - (ஆ) தெளிவு
3. தெருள் - (இ) நூறு
4. சதம் - (ஈ) கருணை
(அ) 1-ஆ, 2-ஈ, 3-அ, 4-இ
(ஆ) 1-ஈ, 2-அ, 3-ஆ, 4-இ
(இ) 1-இ, 2-ஈ, 3-ஆ, 4-அ
(ஈ) 1-ஆ, 2-அ, 3-ஈ, 4-இ
12. ‘மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்’ என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி
(அ) சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.
(ஆ) காப்பிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.
(இ) பக்தி இலக்கியக்காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.
(ஈ) சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.
விடைக்குறிப்பு
1 - அ
2 - இ
3 - ஆ
4 - ஈ
5 - இ
6 - அ
7 - ஈ
8 - ஈ
9 - ஈ
10 - ஈ
11 - ஆ
12 - அ
கருத்துகள்
கருத்துரையிடுக