TET & PG TRB - TAMIL ELIGIBILITY TEST
தேர்வு - 29
01. ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்னும் நூலின் ஆசிரியர்
(அ) மணவை முஸ்தபா
(ஆ) வைரமுத்து
(இ) ராகுல் சாங்கிருத்யாயன்
(ஈ) உமாமகேஸ்வரி
02. திருத்தக்கத்தேவரும், வில்லிபுத்தூராரும் வடமொழி மூலங்களைத் தழுவி எழுதிய நூல்கள்
(அ) மகாபாரதமும் இராமாயணமும்
(ஆ) சீவகசிந்தாமணியும் இராமாயணமும்
(இ) சீவகசிந்தாமணியும் மகாபாரதமும்
(ஈ) திருவிளையாடற்புராணமும், சீவகசிந்தாமணியும்
03. நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி ‘சதாவதானி’ என்ற பட்டம் பெற்றவர்
(அ) பரஞ்சோதி முனிவர்
(ஆ) இரவீந்தரநாத் தாகூர்
(இ) செய்குதம்பி ப் பாவலர்
(ஈ) பாரதியார்
04. அருந்துணை என்பதைப் பிரித்தால் ....................
(அ) அருமை+துணை
(ஆ) அரு+துணை
(இ) அருமை+இணை
(ஈ) அரு+இணை
05. “இங்கு நகரப் பேருந்து நிற்குமா?” என்று வழிப்போக்கர் கேட்பது ............. வினா.
“அதோ, அங்கே நிற்கும்.” என்று மற்றொருவர் கூறியது .............. விடை.
(அ) ஐயவினா, வினா எதிர் வினாதல் விடை
(ஆ) அறிவினா, மறை விடை
(இ) அறியா வினா, சுட்டு விடை
(ஈ) கொளல் வினா, இனமொழி விடை
06. இடைக்காடனாரிடம் பாடலை இகழ்ந்தவர் ................
இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர் ..................
(அ) அமைச்சர். மன்னன்
(ஆ) அமைச்சர், இறைவன்
(இ) இறைவன், மன்னன்
(ஈ) மன்னன், இறைவன்
07. பரஞ்சோதி முனிவரால் இயற்றப்படாத நூல்
(அ) கந்தர் கலிவெண்பா
(ஆ) வேதராண்யப் புராணம்
(இ) திருவிளையாடற்புராணம்
(ஈ) திருவிளையாடற் போற்றிக் கலிவெண்பா
08. பெருக்கி, திருத்தி, அகற்றி என்பன
(அ) பெயரெச்சங்கள்
(ஆ) வினையெச்சங்கள்
(இ) உம்மைத்தொகைகள்
(ஈ) வினைத்தொகைகள்
09. ‘கண் உலர்ந்து எரிச்சல் அடையும்’ என்ற உறுவது கூறல் விடைக்கேற்ற வினா
(அ) உனக்குக் கதை எழுதத் தெரியுமா?
(ஆ) உறக்கம் வரவில்லையா?
(இ) பாடலைப் பாடிக் காட்டுகிறாயா?
(ஈ) இக்கட்டுரையை ஐந்து வகுப்புகளுக்குப் படித்துக் காட்டுகிறாயா?
10. “ஒரு கவிதை எழுதித் தருகிறாயா?” என்னும் வினாவிற்கான மறைவிடை
(அ) நாளை எழுதுகிறேன்.
(ஆ) கை வலிக்கும்.
(இ) எழுதித் தரமாட்டேன்.
(ஈ) எழுதித் தருகிறேன்.
11. தணிந்தது – இச்சொல்லில் அமைந்துள்ள இடைநிலை .................
(அ) நிகழ்கால இடைநிலை
(ஆ) எதிர்கால இடைநிலை
(இ) இறந்தகால இடைநிலை
(ஈ) எதிர்மறை இடைநிலை
12. யாப்படி பலவினுங் கோப்புடை மொழிகளை ஏற்புழி இசைப்பது ............... பொருள்கோள்.
(அ) ஆற்றுநீர்ப் பொருள்கோள்
(ஆ) கொண்டுகூட்டுப் பொருள்கோள்
(இ) முறை நிரல்நிறைப் பொருள்கோள்
(ஈ) எதிர் நிரல்நிறைப் பொருள்கோள்
விடைக்குறிப்பு
1 - இ
2 - இ
3 - இ
4 - இ
5- இ
6 - ஈ
7 - அ
8 - ஆ
9 - ஈ
10 - இ
11 - இ
12 - ஆ
கருத்துகள்
கருத்துரையிடுக