TET & PG TRB - TAMIL ELIGIBILITY TEST

 தேர்வு - 30

01. பொருத்துக.

1. Emblem - (அ) அறிவாளர்

2. Thesis - (ஆ) குறியீட்டியல்

3. Intellectual - (இ) ஆய்வேடு

4. Symbolism - (ஈ) சின்னம்

(அ) 1-, 2-, 3-, 4-

(ஆ) 1-ஈ, 2-அ, 3-ஆ, 4-இ

(இ) 1-ஈ, 2-இ, 3-அ, 4-ஆ

(ஈ) 1-ஆ, 2-அ, 3-ஈ, 4-இ

02. "கழிந்த பெரும் கேள்வியினான் எனக் கேட்டு முழுது உணர்ந்த கபிலன் தன் பால் பொழிந்த பெரும் காதல்மிகு கேண்மையினான் இடைக்காட்டுப் புலவன் தென்சொல்"

இவ்வடிகளில் கழிந்த பெரும் கேள்வியினான் யார்

காதல்மிகு கேண்மையினான் யார்?

(அ) குலேச பாண்டியன், இடைக்காடனார்

(ஆ) கபிலர், இறைவன்

(இ) குலேச பாண்டியன், இறைவன்

(ஈ) பரஞ்சோதி முனிவர், கபிலர்

03. மோசிகீரனார் என்னும் புலவருக்கு கவரி வீசிய மன்னன்

(அ) குலேசபாண்டியன்

(ஆ) நன்னன்

(இ) பெருஞ்சேரல் இரும்பொறை

(ஈ) பாண்டியன் நெடுஞ்செழியன்

04. பொருத்துக.

1. மன்றல் - (அ) காலடிச்சுவடி

2. அடிச்சுவடி - (ஆ) திருமணம்

3. அகராதி - (இ) சிந்துதல்

4. தூவல் - (ஈ) அகரவரிசைப் பொருள் நூல்

(அ) 1-, 2-, 3-, 4- 

(ஆ) 1-ஈ, 2-அ, 3-ஆ, 4-இ

(இ) 1-ஈ, 2-இ, 3-அ, 4-ஆ

(ஈ) 1-ஆ, 2-அ, 3-ஈ, 4-இ

05. மொழிபெயர்ப்பு  அல்லாத தமிழ் காப்பியம் எது?

(அ) பெருங்கதை

(ஆ) சீவக சிந்தாமணி

(இ) கம்பராமாயணம்

(ஈ) சிலப்பதிகாரம்

06. இந்தியாவில் மொழிபெயர்ப்பு முயற்சிகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் யாவை?

(அ) சாகித்திய அகாதெமி

(ஆ) தேசிய புத்தக நிறுவனம்

(இ) தென்னிந்திய புத்தக நிறுவனம்

(ஈ) மேற்கண்ட அனைத்தும்

07. எதன் மூலம் ஒரு மொழி வளமும் உலகத்துடன் உறவும் கொள்ள முடியும்?

(அ) மொழிபெயர்ப்பு

(ஆ) ஒலிபெயர்ப்பு

(இ) பயண இலக்கியம்

(ஈ) சுற்றுப்பயணம்

08. ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு என்று கூறியவர் யார்?

(அ) மணவை முஸ்தபா

(ஆ) தொல்காப்பியர்

(இ) ஜெகந்நாத ராஜா

(ஈ) சா. கந்தசாமி

09. சந்திப் பிழைகளற்ற தொடரைத் தெரிவு செய்க.

(அ) வாழ்க்கை பயணமே வேறுபட்டப் பாடங்களைக் கற்றுத் தருகிறது.

(ஆ) வாழ்க்கைப் பயணமே வேறுபட்டப் பாடங்களை கற்றுத் தருகிறது.

(இ) வாழ்க்கைப் பயணமே வேறுபட்ட பாடங்களைக் கற்றுத் தருகிறது.

(ஈ) வாழ்க்கை பயணமே வேறுபட்ட பாடங்களை கற்று தருகிறது.

10. விடைக்கேற்ற வினா அமைக்க.

கல்வியைப் போற்றிக் காக்க வேண்டும்.

(அ) கல்வி என்றால் என்ன?

(ஆ) எதைப் போற்றிக் காக்க வேண்டும்?

(இ) போற்றிக் வேண்டியவை எவை?

(ஈ) யாரைப் போற்றிக் காக்க வேண்டும்?

11. இன மொழி விடையைத் தெரிவு செய்க.

(அ) 'ஆடுவாயா' என்ற வினாவிற்குப் பாடுவேன் என்று கூறுவது

(ஆ) ‘ஆடுவாயா என்ற வினாவிற்குக் கால் வலிக்கும் என்று கூறுவது

(இ) ‘ஆடுவாயா என்ற வினாவிற்கு மாட்டேன் என்று கூறுவது

(ஈ) ‘ஆடுவாயா என்ற வினாவிற்கு நீயே ஆடு என்று கூறுவது

12. கா.ப செய்குதம்பிப் பாவலர் பற்றிய கூற்றுகளில் சரியானவை

கூற்று 1: சீறாப்புராணத்திற்கு உரை எழுதியுள்ளார்.

கூற்று 2:  கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

கூற்று 3: இடலாக்குடியில் இவருக்கு மணிமண்டபம் உள்ளது.

கூற்று 4: இவருடைய நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.

(அ) 1,2 சரி; 3, 4 தவறு

(ஆ) 1, 2, 3, 4 சரி

(இ) 1,2, தவறு; 3, 4 சரி

(ஈ) 1,3 சரி; 2, 4 தவறு.

விடைக்குறிப்பு

1 - இ

2 - அ

3 - இ

4 - ஈ

5 - ஈ

6 - ஈ

7 - அ

8 - அ

9 - இ

10 - ஆ

11 - அ

12 - ஆ


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்