TET & PG TRB - TAMIL ELIGIBILITY TEST
தேர்வு - 31
01. "அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி" இவ்வடிகளில் பயின்று வந்துள்ள நயங்கள்
(அ) கூழை எதுகை, இணை மோனை
(ஆ) மேற்கதுவாய் எதுகை ஒரூஉ மோனை
(இ) பொழிப்பு மோனை, கீழ்க்கதுவாய் எதுகை
(ஈ) பொழுப்பு மோனை, மேற்கதுவாய் எதுகை
02. சதம் என்றால் ......... என்று பொருள்.
(அ) பத்து
(ஆ) ஆயிரம்
(இ) நூறு
(ஈ) ஐம்பது
03. தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும் – என்று பாடியவர்
(அ) பாரதியார்
(ஆ) இளங்கோவடிகள்
(இ) பாரதிதாசன்
(ஈ) கம்பர்
04. பின்வருவனவற்றுள் வேற்றுமைத் தொடரைத் தெரிவு செய்க.
(அ) அரசே தருக!
(ஆ) அரசர் தந்தார்
(இ) தந்த அரசர்
(ஈ) அரசரால் தரப்பட்டது
05. "நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்" எனப் பாடியவர்
(அ) பாரதியார்
(ஆ) இளங்கோவடிகள்
(இ) பாரதிதாசன்
(ஈ) கம்பர்
06. "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு"
இவ்வடிகளில் யாரால் எதற்குப் புகழ் கிடைத்தது?
(அ) வானத்தால் தமிழ் நாட்டிற்கு
(ஆ) திருவள்ளுவரால் தமிழ்நாட்டிற்கு
(இ) தமிழால் திருவள்ளுவருக்கு
(ஈ) பாரதியாரால் திருவள்ளுவருக்கு
07. கலைச்சொல் தருக. Revolution
(அ) மறுமதிப்பீடு
(ஆ) மறு சிந்தனை
(இ) மறுமலர்ச்சி
(ஈ) புரட்சி
08. கூற்று: மொழிபெயர்ப்பு தொல்காப்பியர் காலத்திலேயே தொடங்கியது.
காரணம்: மொழி பெயர்த்தல் என்ற தொடரைத் தொல்காப்பியர் மரபியலில் குறிப்பிட்டுள்ளார்.
(அ) கூற்று சரி, காரணம் தவறு
(ஆ) கூற்று தவறு, காரணம் சரி
(இ) கூற்று, காரணம் இரண்டும் சரி
(ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு
09. கூற்று 1: இலக்கியம் என்பது கலைச் சிறப்புடையதாகவும் அனைவரது அனுபவமாகவும் பொதுநிலை பெறுகிறது. அத்தகைய பொதுநிலை பெற்ற இலக்கியத்தை மொழிவேலி சிறையில் இடுகிறது.
கூற்று 2 : மொழிவேலியை அகற்றும் பணியை மொழிபெயர்ப்பு செய்கிறது.
(அ) கூற்று 1 சரி; கூற்று 2 தவறு.
(ஆ) கூற்று 1 தவறு; கூற்று 2 சரி.
(இ) கூற்று 1, 2 சரி
(ஈ) கூற்று 1, 2 தவறு
10. 'வால்காவிலிருந்து கங்கை வரை' என்ற நூலைத் தமிழில் மொழி பெயர்த்தவர்
(அ) ராகுல் சாங்கிருத்யாயன்
(ஆ) மணவை முஸ்தபா
(இ) கணமுத்தையா
(ஈ) ஜெகந்நாத ராஜா
11. எந்த மொழி நூல்கள் பிற மொழிகளில் அதிகமாக மொழி பெயர்க்கப்படுகின்றன?
(அ) ஆங்கிலம்
(ஆ) மலையாளம்
(இ) கன்னடம்
(ஈ) தமிழ்
12. கருத்துப் பகிர்வை தருவதால் மொழிபெயர்ப்பை .............. என்பர்.
(அ) நுண்கலை
(ஆ) அறிவுக்கலை
(இ) பேச்சுக்கலை
(ஈ) பயன்கலை
விடைக்குறிப்பு
1 - இ
2 - இ
3 - அ
4 - ஈ
5 - அ
6 - ஆ
7 - இ
8 - இ
9 - இ
10 - இ
11 - ஈ
12 - ஈ
கருத்துகள்
கருத்துரையிடுக