TET & PG TRB - TAMIL ELIGIBILITY TEST
தேர்வு - 32
01. "சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்" என்று பாடியவர் யார்?
(அ) பாரதியார்
(ஆ) பாரதிதாசன்
(இ) கம்பர்
(ஈ) இளங்கோவடிகள்
02. "தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்" என்ற பாரதியாரின் கூற்றிற்கு துணை செய்வது
(அ) தொழிற்கல்வி
(ஆ) மொழிபெயர்ப்பு கல்வி
(இ) ஆங்கிலக் கல்வி
(ஈ) இலக்கியக் கல்வி
03. வினா .............. வகைப்படும்.
(அ) ஆறு
(ஆ) எட்டு
(இ) நான்கு
(ஈ) இரண்டு
04. விடை .......... வகைப்படும்.
(அ) ஆறு
(ஆ) மூன்று
(இ) எட்டு
(ஈ) பத்து
05. உடன்பட்டுக் கூறும் விடையின் பெயர் என்ன?
(அ) நேர் விடை
(ஆ) சுட்டு விடை
(இ) ஏவல் விடை
(ஈ) மறை விடை
06. ஐயம் நீங்கித் தெளிவு பெறவதற்காகக் கேட்கப்படும் வினா வகை எது?
(அ) அறி வினா
(ஆ) அறியா வினா
(இ) ஐய வினா
(ஈ) ஏவல் வினா
07. ஏவல் வினா என்பது .................
(அ) ஒரு செயலைச் செய்யுமாறு வினவுவது
(ஆ) ஒரு பொருளை வாங்கும் பொருட்டு வினவுவது
(இ) ஒரு பொருளை கொடுக்கும் பொருட்டு வினவுவது
(ஈ) எதுவுமில்லை
08. கீழுள்ளவற்றில் குறிப்பு விடையைத் தேர்ந்தெடுக்க.
(அ) சுட்டு விடை
(ஆ) உற்றது உரைத்தல் விடை
(இ) மறை விடை
(ஈ) நேர் விடை
09. கற்றவர் வழி அரசு செல்லும் எனக் கூறுவது
(அ) பக்தி இலக்கியம்
(ஆ) சங்க இலக்கியம்
(இ) நீதி இலக்கியம்
(ஈ) காப்பிய இலக்கியம்
10. “அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அகற்றி மதிக்கும் தெருளை”
- என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?
(அ) தமிழ்
(ஆ) அறிவியல்
(இ) கல்வி
(ஈ) இலக்கியம்
11. பரஞ்சோதி முனிவர் பிறந்த ஊர்
(அ) எட்டயபுரம்
(ஆ) சிதம்பரம்
(இ) வேதராண்யம்
(ஈ) திருவழுந்தூர்
12. பொருத்துக.
1. உதவும் பொருட்டு வினவுவது - (அ) மறை விடை
2. பொருளை வாங்குதல் - (ஆ) நேர் விடை
3. வெளிப்படை - (இ) கொளல் வினா
4. மறுத்துக் கூறுதல் - (ஈ) கொடை வினா
(அ) 1-ஆ, 2-ஈ, 3-அ, 4-இ
(ஆ) 1-ஈ, 2-அ, 3-ஆ, 4-இ
(இ) 1-ஈ, 2-இ, 3-ஆ, 4-அ
(ஈ) 1-ஆ, 2-அ, 3-ஈ, 4-இ
விடைக்குறிப்பு
1 - அ
2 - ஆ
3 - அ
4 - இ
5 - அ
6 - இ
7 - அ
8 - ஆ
9 - ஆ
10 - இ
11 - இ
12 - இ
கருத்துகள்
கருத்துரையிடுக