TET & PG TRB - TAMIL ELIGIBILITY TEST

தேர்வு - 33

01. புதிருக்கான விடையை வரிசைப்படி தேர்ந்தெடுக்க.

தவழும்போது ஒரு பெயர்.

விழும்போது ஒரு பெயர்.

உருளும்போது ஒரு பெயர்.

திரண்டோடும்போது ஒரு பெயர் – அவை என்ன?

(அ) நீர், மழை, ஆறு, ஓடை

(ஆ) மேகம், மழை, நீர், வெள்ளம்

(இ) மாரி, கார், நீர், புனல்

(ஈ) மழை, புனல், மேகம், நீர்

02. செய்யுளில் பல அடிகளில் சிதறிக்கிடக்கும் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு கூட்டிப்பொருள்கொள்வது

(அ) நிரல்நிறைப் பொருள்கோள்

(ஆ) ஆற்றுநீர்ப் பொருள்கோள்

(இ) கொண்டுகூட்டுப் பொருள்கோள்

(ஈ) தாப்பிசைப் பொருள்கோள்

03. செய்யுளில் தொடக்கம் முதல் முடிவு வரை சொற்களை மாற்றாமல் ஆற்றுநீரின் போக்கைப்போல நேராக பொருள்கொள்வது

(அ) நிரல்நிறைப் பொருள்கோள்

(ஆ) ஆற்றுநீர்ப் பொருள்கோள்

(இ) கொண்டுகூட்டுப் பொருள்கோள்

(ஈ) தாப்பிசைப் பொருள்கோள்

04. பொருள்கோள் ................ வகைப்படும்.

(அ) 10

(ஆ) 6

(இ) 4

(ஈ) 8

05. “உனக்குப் படிக்கத் தெரியாது” என்ற நூல் யாருடைய வாழ்க்கை வரலாற்றைக் கூறுகிறது?

(அ) கமலாலயன்

(ஆ) மேரிஜேன்

(இ) பாட்ஸி

(ஈ) மேரி மெக்லியோட் பெத்யூன்

06. “உனக்குப் படிக்கத் தெரியாது” என்ற நூலை இயற்றியவர்

(அ) கமலாலயன்

(ஆ) மேரிஜேன்

(இ) பாட்ஸி

(ஈ) மேரி மெக்லியோட் பெத்யூன்

07. “கொற்கை கோமான் கொற்கையம் பெருந்துறை” என்னும் ஐங்குறுநூறு அடியிலுள்ள கொற்கை அமைந்துள்ள மாவட்டம்

(அ) ஈரோடு

(ஆ) சேலம்

(இ) கரூர்

(ஈ) தூத்துக்குடி

08. பரஞ்சோதி முனிவரின் காலம்

(அ) 12 ஆம் நூற்றாண்டு

(ஆ) 10 ஆம் நூற்றாண்டு

(இ) 2 இரண்டாம் நூற்றாண்டு

(ஈ) 17 ஆம் நூற்றாண்டு

09. பொருத்துக.

1. கேள்வியினான் - (அ) வினையெச்சம்

2. காடனுக்கும் கபிலனுக்கும் – (ஆ) வினைமுற்று

3. வீழ்ந்து - (இ) எண்ணும்மை

4. அமர்ந்தான் - (ஈ) வினையாலணையும் பெயர்

(அ) 1-, 2-, 3-, 4-

(ஆ) 1-ஈ, 2-அ, 3-ஆ, 4-இ

(இ) 1-ஈ, 2-இ, 3-அ, 4-ஆ

(ஈ) 1-ஆ, 2-அ, 3-ஈ, 4-இ

10. பொருள் தருக. விதானம்.

(அ) மேற்கூரை

(ஆ) கொடி

(இ) இருக்கை

(ஈ) சின்னம்

11. யான் என்பது

(அ) தன்மைப் பெயர்

(ஆ) முன்னிலைப் பெயர்

(இ) படர்க்கைப் பெயர்

(ஈ) வினைப்பெயர்

12. கோபத்தீ - பிரித்து எழுதுக.

(அ) கோபம்+தீ

(ஆ) கோப+தீ

(இ) கோ+தீ

(ஈ) கோன்+தீ

13. சாந்தம் - பொருள் தருக.

(அ) இரைச்சல்

(ஆ) பகல்

(இ) இரவு

(ஈ) அமைதி

14. பொருள் தருக. பிரபஞ்சம்

(அ) உலகம்

(ஆ) நிலவு

(இ) பகலவன்

(ஈ) பூ

15. பொருள் தருக. கதலி

(அ) வாழை

(ஆ) பாக்கு

(இ) மணி

(ஈ) ஒப்பனை

விடைக்குறிப்பு

1 - ஆ

2 - இ

3 - ஆ

4 - ஈ

5 - அ

6 - அ

7 - ஈ

8 - ஈ

9 - இ

10 - அ

11 - அ

12 - அ

13 - ஈ

14 - அ

15 - அ


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்