TET & PG TRB - TAMIL ELIGIBILITY TEST

தேர்வு - 34

1.பொருத்துக.

1. தால் - (அ) புலி

2. உழுவை - (ஆ) நாக்கு

3. அகவுதல் - (இ) மிகுந்த அழகு

4. ஏந்தெழில் - (ஈ) ஒலி எழுப்புதல்

(அ) 1-, 2-, 3-, 4-

(ஆ) 1-ஈ, 2-அ, 3-ஆ, 4-இ

(இ) 1-ஈ, 2-இ, 3-ஆ, 4-அ

(ஈ) 1-ஆ, 2-அ, 3-ஈ, 4-இ

2. பொருத்துக.

1. Aesthetics - (அ) தொன்மம்

2. Artifacts - (ஆ) கலைச்சொல்

3. Terminology - (இ) கலைப்படைப்புகள்

4. Myth - (ஈ) அழகியல்

(அ) 1-, 2-, 3-, 4-

(ஆ) 1-ஈ, 2-அ, 3-ஆ, 4-இ

(இ) 1-ஈ, 2-இ, 3-ஆ, 4-அ

(ஈ) 1-ஆ, 2-அ, 3-ஈ, 4-இ

3. கரகாட்டத்தை ................... என்றும் கூறுவர்.

(அ) தப்பாட்டம்

(ஆ) கூத்தாட்டம்

(இ) கும்பாட்டம்

(ஈ) புலியாட்டம்

4. கரகம் என்னும் சொல் இடம்பெறும் ”நீரற வறியாக் கரகத்து” என்னும் அடிகள் இடம்பெற்ற எட்டுத்தொகை நூல் எது?

(அ) அகநானூறு

(ஆ) புறநானூறு

(இ) கலித்தொகை

(ஈ) நற்றிணை

5. சிலப்பதிகாரத்தில் வரும் மாதவி ஆடிய ஆடல்கள் எத்தனை?

(அ) 10

(ஆ) 12

(இ) 11

(ஈ) 8

6. கரகாட்டத்திற்கு துணையாட்டமாக .................... ஆடப்படுகிறது.

(அ) மயிலாட்டம்

(ஆ) ஒயிலாட்டம்

(இ) தேவராட்டம்

(ஈ) சேவையாட்டம்

7.  தேவராட்டத்திற்குரிய இசைக்கருவி ...............

(அ) தவில்

(ஆ) நையாண்டி

(இ) தேவதுந்துபி

(ஈ) தப்பு

8. தேவராட்டம் போன்றே ஆடப்படுவது

(அ) தப்பாட்டம்

(ஆ) குதிரையாட்டம்

(இ) காவடியாட்டம்

(ஈ) சேவையாட்டம்

9. ‘போலச்செய்தல்’ பண்புகளைப் பின்பற்றி நிகழ்த்திக் காட்டப்படும் கலை

(அ) பொய்க்கால் குதிரையாட்டம்

(ஆ) தப்பாட்டம்

(இ) காவடியாட்டம்

(ஈ) சேவையாட்டம்

10. இராஜஸ்தானில் கச்சிகொடி என்றும் கேரளத்தில் குதிரைக்களி என்றும் அழைக்கப்படும் ஆட்டம்

(அ) தப்பாட்டம்

(ஆ) காவடியாட்டம்

(இ) பொய்க்கால் குதிரையாட்டம்

(ஈ) சேவையாட்டம்

11. புரவி ஆட்டம், புரவி நாட்டியம் என்றழைக்கப்படுவது

(அ) தப்பாட்டம்

(ஆ) காவடியாட்டம்

(இ) சேவையாட்டம்

(ஈ) பொய்க்கால் குதிரையாட்டம்

12. திருப்புகழை இயற்றியவர்

(அ) சுந்தரர்

(ஆ) கம்பர்

(இ) குமரகுருபரர்

(ஈ) அருணகிரிநாதர்

13.  தப்பாட்டம் குறித்த கூற்றுகளில் சரியானவற்றைத் தெரிவு செய்க.

கூற்று 1: தப்பட்டை, தப்பு என்றும் அழைப்பர்.

கூற்று 2: தப்பு என்பது வட்ட வடிவமான அமைந்த தோற்கருவி.

கூற்று 3: திருப்புகழில் அருணகிரிநாதர் தப்பாட்ட இசை குறித்து பதிவு செய்துள்ளார்.

கூற்று 4: தப்பாட்ட இசையை பறை என்றும் அழைப்பர்.

(அ) 1, 2 சரி; 3, 4 தவறு

(ஆ) 1, 2 தவறு; 3, 4 சரி

(இ) 1, 2, 3, 4 சரி

(ஈ) 1, 2, 3, 4 தவறு

14. நிகழ்த்தப்படும் இடத்தை அடிப்படையாகக் கொண்டு பெயர் பெற்ற கலை

(அ) பொய்க்கால் குதிரையாட்டம்

(ஆ) தெருக்கூத்து

(இ) புலியாட்டம்

(ஈ) காவடியாட்டம்

15. ‘கலை ஞாயிறு’ என்று போற்றப்படுபவர்

 (அ) பாவாணர்

(ஆ) தாராபாரதி

(இ) ந.முத்துசாமி

(ஈ) குமரகுருபரர்

விடைக்குறிப்பு

1 - ஈ

2 - இ

3 - இ

4 - ஆ

5 - இ

6 - அ

7 - இ

8 - ஈ

9 - அ

10 - இ

11 - ஈ

12 - ஈ

13 - இ

14 - ஆ

15 - இ



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்