புதன், 17 செப்டம்பர், 2025

TET & PG TRB - TAMIL ELIGIBILITY TEST

தேர்வு - 48

01. ‘செல்வத்துப் பயனே ஈதல்’ யாரால் எந்நூலில் கூறப்பட்டுள்ளது?

(அ) நக்கீரரால் புறநானூறு

(ஆ) மாங்குடிமருதனால் மதுரைக்காஞ்சி

(இ) கபிலரால் புறநானூறு

(ஈ) நல்லந்துவரால் கலித்தொகை

02. கொடை இலக்கியங்களாக உள்ளவை

(அ) சங்க இலக்கியங்கள்

(ஆ) அற  இலக்கியங்கள்

(இ) காப்பிய இலக்கியங்கள்

(ஈ) ஆற்றுப்படை இலக்கியங்கள்

03. வள்ளல் எழுவரின் கொடைப்பெருமையைக் கூறும் நூல்

(அ) சிறுபாணாற்றுப்படை

(ஆ) திருமுருகாற்றுப்படை            

(இ) புறநானூறு

(ஈ) கலித்தொகை

04. சேர அரசர்களின் கொடைப்பதிவாக உள்ள நூல்

(அ) பரிபாடல்

(ஆ) பதிற்றுப்பத்து

(இ) புறநானூறு

(ஈ) கலித்தொகை

05. ‘இல்லோர் ஒக்கல் தலைவன்’, ‘பசிப்பிணி மருத்துவன்’ என்றெல்லாம் போற்றப்படுபவர்கள்

(அ) வள்ளல்கள்

(ஆ) அரசர்கள்

(இ) வீரர்கள்

(ஈ) அமைச்சர்கள்

06. வள்ளலின் பொருள் இரவலின் பொருள்

வள்ளலின் வறுமை இரவலின் வறுமை - எனப் பாடியவர்

(அ) அதியன்

(ஆ) நச்செள்ளையார்

(இ) பெருஞ்சாத்தனார்

(ஈ) பெரும்பதுமனார்

07. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் யார்?

(அ) பேகன்

(ஆ) திருமுடிக்காரி

(இ) அதியன்

(ஈ) குமணன்

08. இரவலர் வராவிட்டால் அவர்களைத் தேடி வரவழைப்பவன்

(அ) ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்

(ஆ) பேகன்

(இ) அதியன்

(ஈ) குமணன்

09. பேகனைப் பரணர் எவ்வாறு பாடியுள்ளார்?

(அ) மறுமை நோக்கி கொடுக்காதவன்

(ஆ) உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன்

(இ) இரவலரைத் தேடிச் செல்பவன்

(ஈ) வழங்குவதற்குப் பொருள் உள்ளதா என்று கூட பார்க்காமல் கொடுப்பவன்

10. பௌத்த சமயத்தின் ஒரு பிரிவு

(அ) சமணம்

(ஆ) வைணவம்

(இ) ஜென் தத்துவம்

(ஈ) தாவோயியம்

11.   கலித்தொகை என்பது

(அ) புற இலக்கியம்

(ஆ) அக இலக்கியம்

(இ) அகப்புற இலக்கியம்

(ஈ) காப்பிய இலக்கியம்

12. ‘மலையமான்’ என சிறப்பிக்கப்படுபவர் யார்?

(அ) அதியமான்

(ஆ) பேகன்

(இ) பாரி

(ஈ) திருமுடிக்காரி

13. ‘கவியரசு’ எனப் போற்றப்படுபவர்

(அ) கண்ணதாசன்

(ஆ) வைரமுத்து

(இ) வாணிதாசன்

(ஈ) சுரதா

14. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம் ...............

(அ) அகவற்பா

(ஆ) வெண்பா

(இ) வஞ்சிப்பா

(ஈ) கலிப்பா

15.  நற்றிணை குறிப்பிடும் வாய்மை குறித்த தொடர்

(அ) வாய்மையே நல்லறம்

(ஆ) பிழையா நன்மொழி

(இ) வாய்மையே வெல்க

(ஈ) உயிரினும் மேலானது மெய்

விடைக்குறிப்பு

1 - அ

2 - ஈ

3 - அ

4 - ஆ

5 - அ

6 - ஈ

7 - இ

8 - அ

9 - அ

10 - இ

11 - ஆ

12 - ஈ

13 - அ

14 - அ

15 - ஆ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பத்தாம் வகுப்பு - தமிழ்

மாதாந்திரத்தேர்வு - ஜூன் 2026 இயல் 1 (அமுத ஊற்று) மொத்த மதிப்பெண்கள் 50 PDF வடிவில் DOWNLOAD HERE