TET & PG TRB - TAMIL ELIGIBILITY TEST
தேர்வு - 51
1. செய்யுளில் பல இடங்களில் உள்ள சொற்களோடு பொருந்திப் பொருள்
விளக்குவது
(அ) தற்குறிப்பேற்ற அணி
(ஆ) தீவக அணி
(இ) நிரல்நிறை அணி
(ஈ) தன்மையணி
2. ‘செய்தவம்’ - இச்சொல்லுக்கான இலக்கணக்குறிப்பு
(அ) பண்புத்தொகை
(ஆ) வினைத்தொகை
(இ) உம்மைத்தொகை
(ஈ) உவமைத்தொகை
3. உவமையைப் பொருளோடு பொருத்துக.
1. தாமரை இலை நீர் போல - (அ) நிலைப்புத் தன்மை
2. மழைமுகம் காணாப் பயிர் போல - (ஆ) பாதுகாப்பு
3. கண்ணினைக் காக்கும் இமை போல - (இ) பற்றற்றது
4. கல் மேல் எழுத்து போல - (ஈ) வாட்டம்
(அ) 1-ஈ, 2-இ, 3-ஆ, 4-அ
(ஆ) 1-ஈ, 2-இ, 3-அ, 4-ஆ
(இ) 1-இ, 2-ஈ, 3-ஆ,
4-அ
(ஈ) 1-இ, 2-ஈ, 3-அ,
4-ஆ
4. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது –
இக்குறட்பாவில் பயின்றுவந்துள்ள அணி
(அ) உவமையணி
(ஆ) நிரல்நிறை அணி
(இ) தன்மையணி
(ஈ) தீவக அணி
5. நீண்ட நாள் கழித்து வீட்டிற்கு வந்த மாமாவைக் கண்ட வளவன் ........................ மாமா வந்திருக்கிறாரே என்று வியந்தான்.
(அ) தாமரை இலை நீர் போல
(ஆ) நீர் மேல் எழுத்து போல
(இ) மழை முகம் காணாப் பயிர் போல
(ஈ) அத்திபூத்தாற் போல
6. நாகூர் ரூமி எழுதத் தொடங்கிய இதழ்
(அ) ஆனந்த விகடன்
(ஆ) இந்தியா
(இ) கணையாழி
(ஈ) குடியரசு
7. “ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து அரசு பட அமர் உழக்கி” என்னும்
அடியில் மதுரைக்காஞ்சி குறிப்பிடும் ஆலங்கானம் அமைந்துள்ள மாவட்டம்
(அ) சிவகங்கை
(ஆ) மதுரை
(இ) சேலம்
(ஈ) திருவாரூர்
8. பின்வருவனவற்றுள் வினைத்தொகை
அல்லாத சொல்லைத் தெரிவு செய்க.
(அ) மெய்முறை
(ஆ) உய்முறை
(இ) செய்முறை
(ஈ) காய்மணி
9. பொருத்துக.
1. Humanism - (அ) அமைச்சரவை
2. Cabinet - (ஆ) பண்பாட்டு எல்லை
3. Cultural Boundaries - (இ) பண்பாட்டு விழுமியங்கள்
4. Cultural Values - (ஈ) மனிதநேயம்
(அ) 1-இ, 2-அ, 3-ஈ, 4-ஆ
(ஆ) 1-இ, 2-ஈ, 3-அ, 4-ஆ
(இ) 1-ஆ, 2-அ, 3-ஈ, 4-இ
(ஈ) 1-ஈ, 2-அ, 3-ஆ, 4-இ
10. ஒலித்து – இச்சொல்லில் அமைந்துள்ள விகுதி
(அ) து
(ஆ) உ
(இ) ஒலி
(ஈ) அ
11. பின்வருவனவற்றுள் இறந்தகால இடைநிலை பயின்றுவந்துள்ள சொல்லைத் தெரிவு செய்க.
(அ) அறியேன்
(ஆ) வாழ்க
(இ) வருவான்
(ஈ) ஒலித்து
12. “இவள் தலையில் எழுதியோ
கற்காலம்தான் எப்போதும் ....” -
இவ்வடிகளில் கற்காலம் என்பது
(அ) தலைவிதி
(ஆ) பழைய காலம்
(இ) ஏழ்மை
(ஈ) தலையில் கல் சுமப்பது
13. வாய்மையே மழைநீராகி - இத்தொடரில்
வெளிப்படும் அணி
(அ) உவமை
(ஆ) தற்குறிப்பேற்றம்
(இ) உருவகம்
(ஈ) தீவகம்
14. ஜெயகாந்தனின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல்
(அ) உன்னைப்போல் ஒருவன்
(ஆ) கங்கை எங்கே போகிறாள்
(இ) சில நேரங்களில் சில மனிதர்கள்
(ஈ) ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
15. வியாசர் பாரதத்தை எதற்காக எழுதினார்?
(அ) தர்மார்த்தங்களை உபதேசிக்க
(ஆ) கலைப்பணி புரிவதற்காக
(இ) சமுதாயத் தொண்டுக்காக
(ஈ) கலையைத் தாங்கிப் பிடிக்க
விடைக்குறிப்பு
1 - ஆ
2 - ஆ
3 - இ
4 - ஆ
5 - ஈ
6 - இ
7 - ஈ
8 - அ
9 - ஈ
10 - ஆ
11 - ஈ
12 - ஈ
13 - இ
14 - இ
15 - அ
கருத்துகள்
கருத்துரையிடுக