TET & PG TRB - TAMIL ELIGIBILITY TEST

 தேர்வு - 52

01. இயற்கையில் அமைந்த உண்மையான தன்மையினைக் கூறுவது

(அ) தற்குறிப்பேற்ற அணி

(ஆ) தீவக அணி

(இ) நிரல்நிறை அணி

(ஈ) தன்மையணி

02. வீரமாமுனிவருக்கு ‘இஸ்மத் சன்னியாசி’ என்னும் பட்டத்தை வழங்கியவர்

(அ) பெஸ்கி

(ஆ) சந்தாசாகிப்

(இ) கருணையன்

(ஈ) எலிசபெத்

03. கலையும் அதன் பொருளும் பற்றி ஜெயகாந்தன் கூறுவது

(அ) அழகியலோடும் பொருள் நிறைந்த படைப்பாகவும் இருத்தல் வேண்டும்.


(ஆ) கலை, கலைத்தன்மையோடும் அதன் பொருள் சமூகப் பார்வையோடும் இருக்க  வேண்டும்.

(இ) இலக்கண வளத்தோடு கலைப்படைப்பு அமைதல் வேண்டும்.

(ஈ) கலைத்தன்மையோடும் கட்டமைப்புகளோடும் அமைதல் வேண்டும்.

04. தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவன் யார்?

(அ) சூசையப்பர்

(ஆ) வீரமாமுனிவர்

(இ) கருணையன்

(ஈ) அருளப்பன்

05. ”விரிந்தன கொம்பில் கொய்த வீ யென உள்ளம் வாட” அடிக்கோடிட்ட தொடரின் பொருள்

(அ) பறித்த மலர்

(ஆ) வீழ்ந்த மலர்

(இ) உதிர்ந்த மலர்

(ஈ) மணம்வீசும் மலர்

06. வீரமாமுனிவர் இயற்றிய சிற்றிலக்கியங்களுள் ஒன்று

(அ) தொன்னூல் விளக்கம்

(ஆ) சதுரகராதி

(இ) கித்தேரி அம்மாள் அம்மானை

(ஈ) பரமார்த்த குரு கதைகள்

07.  ‘தீவகம்’ என்னும் சொல்லின் பொருள்

(அ) நெருப்பு

(ஆ) தீவுத்திடல்

(இ) விளக்கு

(ஈ) தீவுப்பகுதி

08. தற்குறிப்பேற்றம் – பிரித்து எழுதுக.

(அ) தன்+குறிப்பு+ஏற்றம்

(ஆ) தன்+குறிப்பு+யேற்றம்

(இ) தங்+குறிப்பு+ஏற்றம்

(ஈ) தன்+குறிப்+ஏற்றம்

09.   நூலின் பயனாக ஜெயகாந்தன் கூறுவது

(அ) அறம், பொருள்

(ஆ) அறம், பொருள், இன்பம்

(இ) அறம், பொருள், இன்பம், வீடு

(ஈ) இவற்றில் எதுவுமில்லை

10. முன்சி பிரேம்சந்தின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல்

(அ) ஒரு கதாசிரியரின் கதை

(ஆ) பிரம்ம உபதேசம்

(இ) ரிஷிமூலம்

(ஈ) பிரளயம்

11.     ‘தர்க்கத்திற்கு அப்பால்’ என்னும் சிறுகதையின் ஆசிரியர்

(அ) தமிழழகனார்

(ஆ) கி. ராஜநாராயணன்

(இ) கு. அழகிரிசாமி

(ஈ) ஜெயகாந்தன்

12. ‘சிறுகதை மன்னன்’ எனப் போற்றப்படுபவர் யார்?

(அ) ஜெயகாந்தன்

(ஆ) கி. ராஜநாராயணன்

(இ) கு. அழகிரிசாமி

(ஈ) தமிழழகனார்

13. இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றிக்கூறுவது

(அ) தற்குறிப்பேற்ற அணி

(ஆ) தீவக அணி

(இ) நிரல்நிறை அணி

(ஈ) தன்மையணி

14. தீவக அணி …..…. வகைப்படும்.

(அ) 4

(ஆ) 6

(இ) 5

(ஈ) 3

15. சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்திப் பொருள்கொள்வது

(அ) தற்குறிப்பேற்ற அணி

(ஆ) தீவக அணி

(இ) நிரல்நிறை அணி

(ஈ) தன்மையணி

விடைக்குறிப்பு

1 - ஈ

2 - ஆ

3 - ஆ

4 - அ

5 - அ

6 - இ

7 - இ

8 - ஆ

9 - இ

10 - அ

11 - ஈ

12 - அ

13 - அ

14 - ஈ

15 - இ


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்