தேர்வு - 37
01. பின்வருவனவற்றுள்
பொருந்தாத இணையைத் தெரிவு செய்க.
(அ) Aesthetics – முருகியல்
(ஆ) Terminology – அழகியல்
(இ) Myth – தொன்மம்
(ஈ) Artifacts – கலைப் படைப்புகள்
02. பொருத்தமான சொல்லைக் கொண்டு நிரப்புக.
அனைவரின் பாராட்டுகளால், வெட்கத்தில் பாடகரின் முகம் ...................
(அ) கருத்தது
(ஆ) வெளுத்தது
(இ) சிவந்தது
(ஈ) சுருங்கியது
03. தொடரில் உள்ள பிறமொழிச்சொற்களுக்கு
இணையான தமிழ்ச்சொற்களைத் தருக.
இரண்டு தட்டுகளிலும் கோல்டு பிஸ்கட்டைப் போட்டு எக்ஸ்பெரிமெண்ட்டை செய்து ஆன்சரைக் கண்டுபிடியுங்கள். இத்தொடரில் உள்ள பிறமொழிக்கான தமிழ்ச்சொற்கள்
(அ) தங்கக் கட்டி, சோதனை, விடை
(ஆ) தங்கப்பெட்டி, செயல், முடிவு
(இ) பொன்வில்லை, கருத்தியல், பதில்
(ஈ) பொற்கட்டி, செய்முறை, பதிலி
04. பொருத்துக.
1. குறிஞ்சி - அ) வைகறை
2. முல்லை - ஆ) மாலை
3. மருதம் - இ) எற்பாடு
4. நெய்தல் - ஈ) யாமம்
(அ) 1-ஆ, 2-ஈ, 3-அ, 4-இ
(ஆ) 1-இ, 2-அ, 3-ஈ, 4-ஆ
(இ) 1-இ, 2-ஈ, 3-அ, 4-ஆ
(ஈ) 1-ஈ, 2-ஆ, 3-அ, 4-இ
05. அன்பின்
ஐந்திணைகள் ....................
(அ) குறிஞ்சி, முல்லை, மருதம் , கைக்கிளை, பெருந்திணை
(ஆ) குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை
(இ) வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, பாடாண்
(ஈ) கைக்கிளை, பெருந்திணை, பொதுவியல், நொச்சி, உழிஞை
06. பொருளல் லவரைப்
பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்
–
இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி
(அ) சொல் பின்வரு நிலையணி
(ஆ) பொருள் பின்வரு நிலையணி
(இ) சொற்பொருள்
பின்வரு நிலையணி
(ஈ) உவமையணி
07. சிலப்பதிகாரம்
குறிப்பிடும் ................. கரகாட்டத்திற்கு அடிப்படையாக
கருதப்படுகிறது.
(அ) குடக்கூத்து
(ஆ) கும்பாட்டம்
(இ) கரகத்தாட்டம்
(ஈ) கரகம்
08. பொருந்தாத இணையைத் தெரிவு செய்க.
(அ) இளவேனில் – சித்திரை,
வைகாசி
(ஆ) கார்காலம் – ஆவணி,
புரட்டாசி
(இ) குளிர்காலம் –
ஐப்பசி, கார்த்திகை
(ஈ) முதுவேனில் – மார்கழி,
தை
09. தமிழ் மக்களின்
வீரத்தைச் சொல்லும் கலையாகத் திகழ்வது ....................
(அ) தேவராட்டம்
(ஆ) தெருக்கூத்து
(இ) ஒயிலாட்டம்
(ஈ) புலியாட்டம்
10. தமிழர் வாழ்வியலை ............... , ............... என வகுத்துள்ளனர்.
(அ) அகம், புறம்
(ஆ) திணை, பொழுது
(இ) முதற்பொருள்,
கருப்பொருள்
(ஈ) எதுவுமில்லை
11. கூற்று 1: பொழுது, பெரும்பொழுது,
சிறுபொழுது என இருவகைப்படும்.
கூற்று 2: ஒராண்டின் ஆறு
கூறுகள் சிறுபொழுது ஆகும்.
கூற்று 3: ஒரு நாளின் ஆறு
கூறுகள் பெரும்பொழுது ஆகும்.
(அ) கூற்று 1 சரி, 2, 3 தவறு
(ஆ) கூற்று 1,2
சரி, 3 தவறு
(இ) கூற்று 1,
2, 3 சரி
(ஈ) கூற்று 1,
2, 3 தவறு
12. கவிஞர் உமா
மகேஸ்வரி எந்த மாவட்டத்தில் பிறந்தார்?
(அ) கன்னியாகுமரி
(ஆ) மதுரை
(இ) திருச்சி
(ஈ) ஈரோடு
13. ‘குண்டலமும்
குழைக்காதும்’ – இலக்கணக்குறிப்பு தருக.
(அ) உம்மைத்தொகை
(ஆ) வினைத்தொகை
(இ) எண்ணும்மை
(ஈ) பண்புத்தொகை
14. கம்பர் எந்த
நாட்டில் பிறந்தார்?
(அ) சேர
(ஆ) சோழ
(இ) பாண்டிய
(ஈ) பல்லவ
15. ஆள்வினை - பொருள்
தருக.
(அ) ஆட்சி செயல்
(ஆ) அரசரின் செயல்
(இ) அமைச்சரின் செயல்
(ஈ) விடாமுயற்சி
விடைக்குறிப்பு
1 - ஆ
2 - இ
3 - அ
4 - ஈ
5 - ஆ
6 - அ
7 - அ
8 - ஈ
9 - ஈ
10 - அ
11 - அ
12 - ஆ
13 - இ
14 - ஆ
15 - ஈ
8 -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக