TET & PG TRB - TAMIL ELIGIBILITY TEST
தேர்வு 36
01. பதிந்து’ இச்சொல்லில் அமைந்துள்ள இடைநிலை
(அ) நிகழ்கால இடைநிலை
(ஆ) இறந்தகால இடைநிலை
(இ) எதிர்கால இடைநிலை
(ஈ) எதிர்மறை இடைநிலை
02. தேவர் அனையர் கயவர் அவரும்தாம்
மேவன செய்தொழுக லான்.
– இக்குறட்பாவில் அமைந்துள்ள அணி
(அ) உவமையணி
(ஆ) எடுத்துக்காட்டு உவமையணி
(இ) வஞ்சப்புகழ்ச்சி அணி
(ஈ) தற்குறிப்பேற்ற அணி
03. பண்புத்தொகையோடு பொருந்தாததைத் தெரிவு செய்க.
(அ) செம்பொன்
(ஆ) செங்கீரை
(இ) வட்டச்சுட்டி
(ஈ) நுதற்பொலி
04. பொருள் தருக. பண்டி
(அ) வயிறு
(ஆ) நெற்றி
(இ) காது
(ஈ) உச்சிக்கொண்டை
05. “பொய்யோ
எனும் இடையாளொடும் இளையானொடும் போனான்” என்னும் கம்பராமாயண அடியிலுள்ள இடையாள் மற்றும்
இளையான் யார்?
(அ) பரதம், இராமன்
(ஆ) இலக்குவன், இராமன்
(இ) கம்பர், அனுமான்
(ஈ) சீதை, இலக்குவன்
06. கம்பரோடு தொடர்பில்லாத தொடரைத் தெரிவு செய்க.
(அ) கல்வியில் பெரியர்
(ஆ) கம்பன் வீட்டுத்தறியும் கவிபாடும்
(இ) விருத்தம் எனும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்
(ஈ) சிந்துக்குத் தந்தை
07. கம்பர் இயற்றாத நூல் எது?
(அ) சரசுவதி அந்தாதி
(ஆ) நீதிநெறி விளக்கம்
(இ) சடகோபர் அந்தாதி
(ஈ) திருக்கை வழக்கம்
08. சா. கந்தசாமியின் சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்ற புதினம்
(அ) சாயாவனம்
(ஆ) விசாரணைக் கமிஷன்
(இ) சூர்ய வம்சம்
(ஈ) சாந்தகுமாரி
09. “ஓங்கு இரும்பரப்பின் வங்க ஈட்டத்து தொண்டியோர்” எனும் சிலப்பதிகாரத்தில்
உள்ள ‘தொண்டி’ எனும் ஊர் அமைந்துள்ள மாவட்டம்
(அ) சேலம்
(ஆ) இராமநாதபுரம்
(இ) கரூர்
(ஈ) ஈரோடு
10. குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை
- இக்குறட்பாவில் அமைந்துள்ள அணி
(அ) எடுத்துக்காட்டு உவமையணி
(ஆ) உருவக அணி
(இ) ஏகதேச உருவக அணி
(ஈ) உவமையணி
11. இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது
– இக்குறட்பாவில் அமைந்துள்ள அணி
(அ) உவமையணி
(ஆ) சொல்பின்வரு நிலையணி
(இ) பொருள்பின்வரு நிலையணி
(ஈ) சொற்பொருள்பின்வரு நிலையணி
12. மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாம்கண்ட தில்
– இக்குறட்பாவில் அமைந்துள்ள அணி
(அ) எடுத்துக்காட்டு உவமையணி
(ஆ) உருவக அணி
(இ) ஏகதேச உருவக அணி
(ஈ) உவமையணி
13. சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்
- இக்குறட்பாவில் அமைந்துள்ள அணி
(அ) எடுத்துக்காட்டு உவமையணி
(ஆ) உவமையணி
(இ) உருவக அணி
(ஈ) ஏகதேச உருவக அணி
14. பொருத்துக.
1. சுட்டி - (அ) தலையில் அணிவது
2. குழை - (ஆ) காதில் அணிவது
3. கிண்கிணி - (இ) நெற்றியில் அணிவது
4. சூழி - (ஈ) காலில் அணிவது
(அ) 1-ஆ, 2-ஈ, 3-அ, 4-இ
(ஆ) 1-ஈ, 2-அ, 3-ஆ, 4-இ
(இ) 1-இ, 2-ஆ, 3-ஈ, 4-அ
(ஈ) 1-ஆ, 2-அ, 3-ஈ, 4-இ
15. விடைக்கேற்ற வினாவைத் தெரிவு செய்க.
கயவர் மக்களைப் போலவே இருப்பர்.
(அ) கயவர் யாரைப் போல இருப்பர்?
(ஆ) கயவர் என்றால் என்ன?
(இ) கயவர் யார்?
(ஈ) கயவரின் பண்பு யாது?
விடைக்குறிப்பு
1 - ஆ
2 - இ
3 - ஈ
4 - அ
5 - ஈ
6 - ஈ
7 - ஆ
8 - ஆ
9 - ஆ
10 - ஈ
11 - ஈ
12 - ஈ
13 - ஆ
14 - இ
15 - அ
கருத்துகள்
கருத்துரையிடுக