TET & PG TRB - TAMIL ELIGIBILITY TEST
தேர்வு - 50
01. சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியில் பிறந்தவர்
(அ) அழகிரிசாமி
(ஆ) ஜெயகாந்தன்
(இ) முத்தையா
(ஈ) வைரமுத்து
02. மனம் என்னும் வயலில், சொல்லேர் உழவானாக, சிந்தனை விதையைத்
தூவி, மடமைக் களை பறித்து, தத்துவ நீர் பாய்ச்சி,
அறம் என்னும் கதிர் அறுப்பவர் யார்?
(அ) மன்னர்
(ஆ) கவிஞர்
(இ) நடிகர்
(ஈ) பாடகர்
03. காலக்கணிதமான விளங்குபவர்
(அ) மன்னர்
(ஆ) கவிஞர்
(இ) நடிகர்
(ஈ) பாடகர்
04. ”எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை என்ப தறிந்து ஏகுமென் சாலை!”
-
இத்தொடரிலுள்ள எவ்வெவை - பிரித்து எழுதுக.
(அ) எவ்+எவை
(ஆ) எவை+எவை
(இ) எ+எவை
(ஈ) எவை+யெவை
05. யாப்பின் உறுப்புகள் ……….
(அ) 10
(ஆ) 6
(இ) 4
(ஈ) 12
06. பொருத்துக.
1. வெண்பா - அ) அகவலோசை
2. ஆசிரியப்பா - ஆ) தூங்கலோசை
3. கலிப்பா - இ) செப்பலோசை
4. வஞ்சிப்பா - ஈ) துள்ளலோசை
(அ) 1-இ, 2-அ, 3-ஈ, 4-ஆ
(ஆ) 1-இ, 2-ஈ, 3-அ, 4-ஆ
(இ) 1-ஆ, 2-அ, 3-ஈ, 4-இ
(ஈ) 1-ஈ, 2-அ, 3-இ, 4-ஆ
07. அகவற்பா எனப்படுவது …………..
(அ) வஞ்சிப்பா
(ஆ) வெண்பா
(இ) கலிப்பா
(ஈ) ஆசிரியப்பா
08. சங்க இலக்கியங்களில் அமைந்துள்ள பாவினம்
(அ) வஞ்சிப்பா
(ஆ) வெண்பா
(இ) கலிப்பா
(ஈ) ஆசிரியப்பா
09. திருக்குறளிலும் நாலடியாரிலும் அமைந்துள்ள ஓசை …………
(அ) செப்பலோசை
(ஆ) அகவலோசை
(இ) தூங்கலோசை
(ஈ) துள்ளலோசை
10. ஏகாரத்தில் முடிவது ………….
(அ) வஞ்சிப்பா
(ஆ) வெண்பா
(இ) கலிப்பா
(ஈ) அகவற்பா
11. நாள், மலர், காசு, பிறப்பில் முடிவது …………..
(அ) வஞ்சிப்பா
(ஆ) வெண்பா
(இ) கலிப்பா
(ஈ) ஆசிரியப்பா
12. நான்கு சீராய் வருவது ………..
(அ) அளவடி
(ஆ) சிந்தடி
(இ) குறளடி
(ஈ) நெடிலடி
13. பொருத்துக.
1. Belief - அ) மெய்யியலாளர்
2. Philosher - ஆ) மறுமலர்ச்சி
3. Renaissance - இ) மீட்டுருவாக்கம்
4. Revivalism - ஈ) நம்பிக்கை
(அ) 1-இ, 2-அ, 3-ஈ, 4-ஆ
(ஆ) 1-இ, 2-ஈ, 3-அ, 4-ஆ
(இ) 1-ஆ, 2-அ, 3-ஈ, 4-இ
(ஈ) 1-ஈ, 2-அ, 3-ஆ, 4-இ
14. நேரடி என்பது
(அ) சிந்தடி
(ஆ) குறளடி
(இ) நெடிலடி
(ஈ) அளவடி
15. பொருத்துக.
1. மறுமை நோக்கிக் கொடுக்காதவன் - அ) மலையமான்
2. எல்லாவற்றையும் கொடுப்பவன் - ஆ) சேரலாதன்
3. வறுமையுற்றாலும் கொடுப்பவன் - இ) பேகன்
4. தேடி வரவழைத்துக் கொடுப்பவன் - ஈ) அதியன்
(அ) 1-இ, 2-அ, 3-ஈ, 4-ஆ
(ஆ) 1-இ, 2-ஈ, 3-அ, 4-ஆ
(இ) 1-ஆ, 2-அ, 3-ஈ, 4-இ
(ஈ) 1-ஈ, 2-அ, 3-ஆ, 4-இ
விடைக்குறிப்பு
1 - இ
2 - ஆ
3 - ஆ
4 - ஆ
5 - ஆ
6 - அ
7 - ஈ
8 - ஈ
9 - அ
10 - ஈ
11 - ஆ
12 - அ
13 - ஈ
14 - ஈ
15 - அ
கருத்துகள்
கருத்துரையிடுக