திங்கள், 24 நவம்பர், 2025

பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள்

 25.11.2025, செவ்வாய்

திருக்குறள்

அவைஅறிந்து  ஆராய்ந்து  சொல்லுக  சொல்லின்

தொகைஅறிந்த  தூய்மை  யவர்.

பொருள்

சொற்களின் தொகுதியை அறிந்த தூய்மையானவர், அவையின் தரத்தைத் தெரிந்து ஆராய்ந்து சொல்ல வேண்டும்.

பழமொழி

Calm before the storm. stoop to conquer.

புலி பதுங்குவது பாய்வதற்கு அடையாளம்.

பொன்மொழி

உங்களுக்கு மற்றவர் எதை செய்தால், நீங்கள் அதை விரும்ப மாட்டீர்களோ, நீங்களும் அதை மற்றவர்களுக்குச் செய்யாதீர்கள். - கன்பூசியஸ்.

பொதுஅறிவு

இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

சர் ஆர்தர் காட்டன்.

இன்றைய முக்கியச் செய்திகள்

* 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நேற்று பதவியேற்பு.

* திருவண்ணாமலை கிரிவலப்பாதையின் 1500 பேர் பரதநாட்டியம் ஆடி உலக சாதனை.

* சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் இடையே வந்தே பாரத் ரெயில் சேவையை  அடுத்த மாதம் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

* கியூ ஆர் கோடு, புகைப்படத்துடன் புதிய ஆதார் அட்டை. டிசம்பரில் புதிய விதிகளை அமல்படுத்த திட்டம்.

* வங்கக்கடலில் இன்னொரு புயல் சின்னம் உருவாகிறது. தமிழ்நாட்டுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை.

*  14வது ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டி தொடங்கியது.

TODAY'S HEADLINES

* Suryakanth took oath as the 53rd Chief Justice yesterday.

* 1500 people danced Bharatanatyam at the Girivalapathai in Tiruvannamalai, creating a world record.

* The Prime Minister will inaugurate the Vande Bharat train service between Chennai Egmore and Rameswaram next month.

* New Aadhaar card with QR code, photo. New rules to be implemented in December.

* Another cyclone forming in Bay of Bengal. Orange alert for heavy rains for Tamil Nadu.

* The 14th Junior Men's Hockey World Cup has begun.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எட்டாம் வகுப்பு - தமிழ்

  அரையாண்டுத் தேர்வு டிசம்பர் - 2025 திருவண்ணாமலை மாவட்டம் உத்தேச விடைக்குறிப்பு PDF வடிவில் வினாத்தாள் DOWNLOAD HERE விடைக்குறிப்பு DOWNLOA...