புதன், 5 நவம்பர், 2025

பள்ளி காலை வணக்கக்கூட்டச் செயல்பாடுகள்

05.11.2025, புதன்

திருக்குறள்

நிலத்தில்  கிடந்தமை  கால்காட்டும்  காட்டும்

குலத்தில்  பிறந்தார்வாய்ச்  சொல்

பொருள்

நிலத்தின் இயல்பை அதில் தோன்றிய தாவரம் அறிவிக்கும். அதுபோல நல்ல குடியில் பிறந்தவரின் இயல்பை அவர்கள் வாய்மொழியே காட்டி விடும்.

பழமொழி

Familiarity breeds contempt.

பழகப் பழகப் பாலும் புளிக்கும்.

பொன்மொழி

உலகில் உள்ள மக்கள் உன்னைப் புகழ்ந்தாலும் சரி; இகழ்ந்தாலும் சரி; நீ உண்மை என்னும் பாதையிலிருந்து அணுவளவும் பிறழாமல் கவனமாக இருக்க வேண்டும். - சுவாமி விவேகானந்தர்.

பொதுஅறிவு

தமிழ்நாட்டின் ஏரிகள் மாவட்டம் எது?

செங்கல்பட்டு

இன்றைய முக்கியச் செய்திகள்

* பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது.

* பன்னிரண்டாம் வகுப்புக்கு மார்ச் 2 முதல் 26 வரை பொதுத்தேர்வு நடைபெறும்.

* பத்தாம் வகுப்புக்கு மார்ச் 11 முதல் ஏப்ரல் 6 வரை பொதுத்தேர்வு நடைபெறும்.

* தமிழகத்தில் வாக்காளர் சிறப்புத் திருத்தம் தொடங்கியது.

* ஜவ்வாதுமலையில் சிவன் கோயில் கட்டுமான பணியின்போது தங்கப்புதையல் கண்டெடுக்கப்பட்டது.

* தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பொழியும்.

TODAY'S HEADLINES

* The public examination schedule for classes 10 and 12 has been released.

 * The public examination for class 12 will be held from March 2 to 26.

 * The public examination for class 10 will be held from March 11 to April 6.

 * Voter special revision has begun in Tamil Nadu.

 * Gold coins were found during the construction work of the Shiva temple in Jawvadumalai.

 * Heavy rains will lash 7 districts in Tamil Nadu today.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒன்பதாம் வகுப்பு - தமிழ்

மாதாந்திரத்தேர்வு - ஜூலை 2026 இயல் 2 (உயிருக்கு வேர்) மொத்த மதிப்பெண்கள் 50 PDF வடிவில் DOWNLOAD HERE