பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 09.01.2024, செவ்வாய்
09.01.2024, செவ்வாய்
திருக்குறள்
கற்றிலன் ஆயினும் கேட்க, அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை
பொருள்
ஒருவன் கற்க வாய்ப்பு இல்லாமல் இருந்தாலும் கற்றாரிடம் சென்று கேட்டறிய வேண்டும். வாழ்க்கையில் தளர்ச்சியுறும்போது அக்கேள்வி அறிவானது, அவனுக்கு ஊன்றுகோல்போலத் துணையாக நிற்கும்.
பழமொழி
LITTLE WEALTH LITTLE CARE
மடியில் கனமில்லையென்றால் வழியில் பயமில்லை.
பொன்மொழி
எப்பொழுதும் வாழ்க்கையில் எதிர்கேள்வி கேட்காதீர்கள். எப்பொழுதும் பதிலளியுங்கள். - சுந்தர் பிச்சை.
பொதுஅறிவு
தமிழ் எழுத்துகளால் வடிவமைக்கப்பட்ட 25 அடி உயர திருவள்ளுவர் சிலை எங்கு நிறுவப்பட்டுள்ளது?
கோவை
இன்றைய முக்கியச் செய்திகள்
💥 தமிழகத்தில் ரூபாய் 7 இலட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் தகவல்.
💥 பேருந்து ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்.
💥 கனமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் உத்தரவு.
💥 கர்ப்பிணிகளுக்காக பிக்மி 3.0 என்ற மென்பொருள் தொடங்கப்பட்டுள்ளது.
💥 அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு கால்கோள் விழா நேற்று நடைபெற்றது.
💥 பாரீஸ் ஒலிம்பிக்குக்கு துப்பாக்கிச் சுடுதல் போட்டிக்கு வருண், ஈஷா தகுதிபெற்றனர்.
TODAY'S HEADLINES
💥 Investments of Rs 7 lakh crore have been attracted in Tamil Nadu. Chief Minister information.
💥 Bus workers strike from today.
💥 Chief Minister orders District Collectors to take precautionary measures to face heavy rains.
💥 Pygmy 3.0 software has been launched for pregnant women.
💥 Jallikattu competition was held at Alankanallur yesterday.
💥 Varun and Esha
qualified for Paris Olympics shooting competition.
கருத்துகள்
கருத்துரையிடுக