பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 12.01.2024, வெள்ளி

12.01.2024, வெள்ளி

திருக்குறள்

பொறுத்தல்  இறப்பினை  என்றும்  அதனை

மறத்தல்  அதனினும்  நன்று

பொருள்

பிறர் செய்யும் துன்பத்தை ஒருவர் பொறுத்துக்கொள்ளுதல் சிறந்தது. அத்துன்பத்தை மறந்துவிடுதல்  அதனைவிடச் சிறந்தது.

பழமொழி

THE LAW-MAKER SHOULD NOT BE A LAW-BREAKER

வேலியே பயிரை மேய்ந்தால்  விளைவது எப்படி?

பொன்மொழி

கற்று தெளிவது கல்வி. அறிந்து தெளிவது அறிவு.

பொதுஅறிவு

இந்தியாவில் அதிக அளவில் சர்க்கரை உற்பத்தி செய்யும் மாநிலம் எது?

மகாராஷ்டா.

இன்றைய முக்கியச் செய்திகள்

💥 தமிழகப் பள்ளிகளில் ஏ.ஐ. தொழில்நுட்பங்களைக் கற்பிக்க TEALS எனும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

💥 அடுத்த கல்வியாண்டு முதல் இரண்டாண்டு பி.எட்.படிப்புக்கு அனுமதி வழங்கப்படாது என தகவல்.

💥 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு செய்முறைத் தேர்விற்கான கால அட்டவணை வெளியீடு.

💥 அரசுப் பள்ளிகளில் சமூக நீதிபாடல். அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்.

💥 தமிழ்நாட்டில் இன்று முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.

💥 ரூபாய் 4 கோடி மதிப்பிலான நிலத்தை அரசுப் பள்ளிக்கு தானமாக வழங்கினார் வங்கி ஊழியர்.

TODAY'S HEADLINES

💥 AI in Tamilnadu schools A program called TEALS has been launched to teach technology.

💥 Information that admission will not be granted for two-year B.ED course from the next academic year.

💥 Release of time table for practical exam for class 10, 11, 12.

💥 Social Justice in Government Schools. Information from Minister Anbil Mahesh.

💥 Pongal special buses in Tamil Nadu from today.

💥 A bank employee donated land worth Rs 4 crore to a government school.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்