பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 18.01.2024, வியாழன்
18.01.2024, வியாழன்
திருக்குறள்
முதல்இலார்க்கு ஊதியம் இல்லை மதலையாம்
சார்புஇலார்க்கு இல்லை நிலை
பொருள்
முதல் இல்லாத வணிகருக்கு வியாபாரத்தில் இலாபம் இல்லை. தாங்குகின்ற துணையான பெரியோர் இல்லாதவர்க்கு நிலைத்த வாழ்வில்லை.
பழமொழி
No smoke without fire.
நெருப்பில்லாமல் புகையாது.
பொன்மொழி
உண்மை பேசுவாயாக. சினத்தைத் தவிர்ப்பாயாக. உன்னிடம் இருப்பது மிகக் கொஞ்சமானாலும் யாசிக்கின்றவர்களுக்கு அதை ஈவாயாக. இம்மூன்றையும் செய்கிற ஒருவன் நற்கதி அடைவார். - கவுதம புத்தர்.
பொதுஅறிவு
2023 ஆம் ஆண்டுக்கான பிஃபா சிறந்த வீரர் விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
லயோனல் மெஸ்ஸி
இன்றைய முக்கியச் செய்திகள்
💥 கடல்சார் வர்த்தகம் அதிகரிக்கப்படும் - பிரதமர் மோடி.
💥 தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் வேண்டுகோள்.
💥 உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றது.
💥 நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் விரைவில் காலை உணவுத்திட்டம். - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்.
💥 இரண்டாம் வகுப்பு பாடத்தை சரளமாக படிக்க இயலாத 25 சதவீதம் இளைஞர்கள். ஆய்வில் தகவல்.
💥 தென்மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு.
💥 ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மூன்றாவது டி 20 போட்டியிலும் இந்தியா வென்று தொடரை முழுமையாக கைப்பற்றியது.
TODAY'S HEADLINES
💥 Maritime trade will be increased - Prime Minister Modi.
💥 Chief Minister of Tamil Nadu requested the central government to release the fishermen of Tamil Nadu.
💥 The world famous Alanganallur Jallikattu competition was held successfully.
💥 Breakfast program for aided schools soon. - Minister Anbil Mahesh information.
💥 25 percent of the youth who cannot study the second class subject fluently. Information in the study.
💥 Chance of rain in southern districts today and tomorrow.
💥 India won the third T20 match against Afghanistan and won the series
completely.
கருத்துகள்
கருத்துரையிடுக