பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 26.01.2024, வெள்ளி
26.01.2024, வெள்ளி
திருக்குறள்
படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.
பொருள்
ஆற்றல் மிகுந்த படை, அறிவார்ந்த குடிமக்கள், குறையாத வளம், குறையற்ற அமைச்சர், துன்பத்தில் உதவும் நட்பு, அழிக்க முடியாத அரண் ஆகிய ஆறு சிறப்புகளையும் உடையதே ஆண்சிங்கம் போன்ற அரசாகும்.
பழமொழி
A MAN OF COURAGE NEVER WANTS WEAPONS.
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.
பொன்மொழி
உங்களிடம் உள்ள மிகவும் விலைமதிப்பற்ற செல்வம் நேரமாகும்.
- ஸ்டீவ் ஜாப்ஸ்
பொதுஅறிவு
தேசிய பெண் குழந்தைகள் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
ஜனவரி 24.
இன்றைய செய்திகள்
💥 இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடரும். நாட்டின் 75 வது குடியரசு தின விழா உரையில் குடியரசுத் தலைவர் நம்பிக்கை.
💥 3 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது. தமிழக அரசு அறிவிப்பு.
💥 கர்நாடாகாவில் பழைய ஓய்வூதியத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. முதலமைச்சர் சித்தராமையா.
💥 தமிழக நாட்டுப்புற கலைஞர் பத்ரப்பன் உள்பட 34 பேருக்கு பத்மஸ்ரீ விருது.
💥 ஐ.சி.சி ஒருநாள் கிரிக்கெட்டின் சிறந்த வீரர் விருதை வென்றார் விராட் கோலி.
TODAY'S HEADLINES
💥 Economic growth of India will continue. Hope of the President in his speech on the 75th Republic Day of the country.
💥 Nammalwar Award to 3
farmers. Tamil Nadu Government Notification.
💥 Old pension scheme is being implemented in Karnataka. Chief Minister Siddaramaiah.
💥 Padma Shri award to 34 people including Tamil Nadu folk artist Bhadrappan.
💥 Virat Kohli won the ICC
ODI Player of the Year award.
கருத்துகள்
கருத்துரையிடுக