TNPSC - பொதுத்தமிழ் - Group IV, II (தேர்வு - 3)

புதிய பாடத்திட்டத்தின்படி உருவாக்கப்பட்ட வினாக்கள்

நாள்தோறும் பத்து வினாக்கள்

படித்துப் பயன்பெறுங்கள்

தேர்வு - 3

1. “சொல்லாலும் செயலாலும் மனதாலும் தொழுதார்

நல்லோர்கள் பணிதந்த தமிழ்வாழ்க நாளும்”

எனப் பாடியவர் யார்?

(A) நாமக்கல் கவிஞர்

(B) முடியரசன்

(C) பாரதிதாசன்

(D) தாராபாரதி

2. வேர்ச்சொல் காண்க. நிற்றல் 

(A) நிர் 

(B) நில் 

(C) நிற்க 

(D) நின்

3. “சிதைவிடத்து ஒல்கார்” இத்தொடரில் ஒல்கார் என்பது யாரைக் குறிக்கிறது?            

(A) மன வலிமையுடையவர்

(B) மனந்தளராதவர் 

(C) மனக்கட்டுப்பாடு உடையவர்  

(D) மனச்சோர்வு உடையவர்

4. வேர்ச்சொல் காண்க. எய்தார்

(A) எய் 

(B) எய்தி  

(C) எய்து 

(D) எய்க

5. பிரித்து எழுதுக. பாடூன்றும்

(A) பாடூ+ஊன்றும்     

(B) பா+ஊன்றும் 

(C) பாட்டு+ஊன்றும் 

(D) பாடு+ஊன்றும்

6. “உள்ளம்  உடைமை  உடைமை  பொருளுடைமை 

நில்லாது நீங்கி விடும்” 

இக்குறட்பாவில் பயின்று வரும் அணி

(A) சொல்பின்வரு நிலையணி

(B) பொருள்பின்வரு நிலையணி

(C) சொற்பொருள் பின்வரு நிலையணி

(D) வேற்றுமையணி

7. நெருப்பு என்னும் பொருள் தரும் சொல்

(A) கொள்ளி

(B) கொல்லி 

(C)  சுள்ளி

(D) சுல்லி

8. திரிகடுகத்தை இயற்றிய நல்லாதனார் எந்த சமயத்தைச் சார்ந்தவர்?

(A) சைவம்

(B) சமணம்

(C) பொளத்தம்

(D) வைணவம்

9. வேர்ச்சொல் காண்க. பேணார்.

(A) பேண்

(B) பேணு

(C) பேணி

(D) பெண்

10.      பிரித்து எழுதுக. பல்பொருணீங்கிய.

(A) பல+பொருள்+நீங்கிய

(B) பல்+பொருண்+நீங்கிய

(C) பல+பொருண்+நீங்கிய

(D) பன்+பொருள்+நீங்கிய

விடைகள்

1 - A

2 - B

3 - B

4 - C

5 - D

6 - A

7 - B

8 - D

9 -A

10 - A

இதனைப் போன்று வினாக்கள் தொடர்ந்து படிக்க 

தமிழ்ச்சிட்டு TNPSC புலனக்குழுவில் இணையவும்.

தமிழ்ச்சிட்டு TNPSC புலனக்குழு


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்