TNPSC - பொதுத்தமிழ் - Group IV, II (தேர்வு - 4)

புதிய பாடத்திட்டத்தின்படி உருவாக்கப்பட்ட வினாக்கள்

நாள்தோறும் பத்து வினாக்கள்

படித்துப் பயன்பெறுங்கள்

தேர்வு - 4

1. பொருத்துக.

(அ) உகிர்          - (1) குட்டி               

(ஆ) குருளை   - (2) பன்றி                   

(இ) பிணவு      - (3) நகம்

(ஈ) கேழல்         (4) பெண்             

(A) 2, 3, 4, 1

(B) 3, 1, 4, 2

(C) 4, 3, 2, 1

(D) 4, 3, 1, 2

2. ஈதல் என்பதன் எதிர்ச்சொல்

(A) கொடுத்தல்

(B) ஏற்றல்

(C) அளித்தல்

(D) வழங்குதல்

3. பொருத்துக.

(அ) Excavation  - (1) பொறிப்பு                     

(ஆ) Epigraphy  - (2) அகழாய்வு                  

(இ) Herostone    - (3) கல்வெட்டியல்                      

(ஈ) Inscription   - (4) நடுகல்

(A) 2, 3, 4, 1

(B) 3, 1, 4, 2

(C) 4, 3, 2, 1

(D) 4, 3, 1, 2

4. பிரித்து எழுதுக. கொங்கலர்தார்

(A) கொங்கு+தலர்+தார்

(B) கொங்கு+அலர்+தார்

(C) கொன்+அலர்+தார்

(D) கொங்கு+கலர்+தார்

5.   கலைச்சொல் தருக. Savor

(A) தியாகம்

(B) சடங்கு

(C) முத்திரை

(D) நறுமணம்

6.   சேர்த்து எழுதுக. ஓர்+உலகம்

(A) ஓருலகம்

(B) ஒன்றுலகம்

(C) ஒருவுலகம்

(D) மூன்றும் சரி

7. “சின்னதொரு கடுகுபோல் உள்ளம் கொண்டோன்

தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்!”

எனப் பாடியவர் யார்?

(A) நாமக்கல் கவிஞர்

(B) முடியரசன்

(C) பாரதிதாசன்

(D) தாராபாரதி    

8. பொருந்தாத இணையைத் தெரிவு செய்க.

(A) விளை - உண்டாக்குதல்

(B) விழை - விரும்பு

(C) இளை - செடி

(D) இழை - நுலிழை

9. ‘வெய்யோன்’ என்பதன் தவறான பொருளைத் தெரிவு செய்க.

(A) பகலவன்

(B) சந்திரன்

(C) ஞாயிறு

(D) ஆதவன்

10. வேர்ச்சொல் காண்க. காப்பார்

(A) கா

(B) காப்பு

(C) காண்

(D) காக்க

விடைகள்

1 - B

2 - B

3 - A

4 - B

5 - D

6 - A

7 - C

8 - C

9 - B

10 - A

இதனைப் போன்று வினாக்கள் தொடர்ந்து படிக்க 

தமிழ்ச்சிட்டு TNPSC புலனக்குழுவில் இணையவும்.

தமிழ்ச்சிட்டு TNPSC புலனக்குழு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்