PG TRB - TAMIL ELIGIBILITY TEST
தேர்வு - 21
01. அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்துக் காரணமாக அமைவது
(அ) வேற்றுமை உருபு
(ஆ) எழுவாய்
(இ) உவம உருபு
(ஈ) உரிச்சொல்
02. காசிக்காண்டம் என்பது
(அ) காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்
(ஆ) காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்
(இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்
(ஈ) காசி நதரத்திற்கு வழிப்படுத்தும் நூல்
03. ‘விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு’. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை
(அ) நிலத்திற்கேற்ற விருந்து
(ஆ) இன்மையிலும் விருந்து
(இ) அல்லிலும் விருந்து
(ஈ) உற்றாரின் விருந்து
04. ‘Modern literature’ என்னும் ஆங்கிலச்சொல்லுக்கான தமிழ்ச்சொல் தருக.
(அ) வட்டார இலக்கியம்
(ஆ) நாட்டுப்புற இலக்கியம்
(இ) நவீன இலக்கியம்
(ஈ) பண்டைய இலக்கியம்
05. கொற்கைத் துறைமுகம் ................. நாட்டில் அமைந்துள்ளது.
(அ) சேர
(ஆ) சோழ
(இ) பாண்டிய
(ஈ) பல்லவ
06. கூற்று: சீன நாட்டு பண்டைய துறைமுகமான சூவன்சௌ என்னும் இடத்தில் சிவன் கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது.
காரணம்: பண்டைய தமிழ் வணிகர்கள் சூவன்சௌ துறைமுக நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.
(அ) கூற்று சரி; காரணம் தவறு
(ஆ) கூற்று தவறு; காரணம் சரி
(இ) கூற்று, காரணம் இரண்டும் சரி
(ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு
07. பரிபாடல் ............. நூல்களுள் ஒன்று.
(அ) எட்டுத்தொகை
(ஆ) பத்துப்பாட்டு
(இ) பதினெண்கீழ்க்கணக்கு
(ஈ) ஐம்பெருங்காப்பியம்
08. 'ஓங்கு’ என்னும் அடை மொழியால் குறிக்கப்படும் நூல்
(அ) நற்றிணை
(ஆ) ஐங்குறுநூறு
(இ) பரிபாடல்
(ஈ) புறநானூறு
09. பரிபாடலில் மொத்தம் ........... பாடல்கள் உள்ளன. அதில் .......... பாடல்கள் கிடைத்துள்ளன.
(அ) 80, 22
(ஆ) 70, 24
(இ) 70, 20
(ஈ) 80, 24
10. 'விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல' என்னும் பாடல் மூலம் புவியின் உருவாக்கம் குறித்து கூறும் எட்டுத்தொகை நூல்
(அ) அகநானூறு
(ஆ) ஐங்குறுநூறு
(இ) நற்றிணை
(ஈ) பரிபாடல்
விடைக்குறிப்பு
1 - அ
2 - இ
3 - ஆ
4 - இ
5 - இ
6 - இ
7 - அ
8 - இ
9 - ஆ
10 - ஈ
கருத்துகள்
கருத்துரையிடுக