PG TRB - TAMIL ELIGIBILITY TEST

 தேர்வு - 20

01. விடுபட்ட உணவு வரிசைகளை வரிசைப்படுத்துக.

பச்சரியைக் கொண்டு ................. செய்து பாசிப்பருப்பினை வறுத்து .................. பிடித்து கேரட்டைத்  துருவி நெய்யிட்டு ............. செய்து முடித்த அம்மா, இறுதியாக உருளைக் கிழங்கைச் சீவி ................ செய்து அனைவரையும் உணவு உண்ண அழைத்தார்.

(அ) பொங்கல், உருண்டை, சீவல், அல்வா

(ஆ) சீவல், உருண்டை, பொங்கல், அல்வா

(இ) பொங்கல், உருண்டை, அல்வா, சீவல்

(ஈ) உருண்டை, சீவல், அல்வா, பொங்கல்

02. கண்ணோட்டம் என்னும் சொல்லின் பொருள்

(அ) கவனித்தல்

(ஆ) உற்றுநோக்கல்

(இ) இரக்கம்

(ஈ) விடாமுயற்சி

03. பொருத்துக.

1. குறள் - (அ) போற்றி

2. ஊழ் - (ஆ) செல்வம்

3. திரு - (இ) இரண்டடி வெண்பா

4. பேணி - (ஈ) முன்வினை

(அ) 1-ஈ, 2-இ, 3-ஆ, 4-அ

(ஆ)  1-இ, 2-ஈ, 3-ஆ, 4-அ

(இ) 1-அ, 2-, 3-இ, 4-ஆ 

(ஈ)  1-ஈ, 2-இ, 3-அ, 4-ஆ

04. பொருத்துக.

1. தேடித்தேடி - (அ) வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்

2. தெரிந்த நபர் - (ஆ) வினைமுற்றுத் தொடர்

3. வளர்ந்தது தமிழ்  - (இ) பெயரெச்சத்தொடர்

4. ஊரின்கண் நீங்கினர் - (ஈ) அடுக்குத்தொடர்

(அ) 1-ஈ, 2-இ, 3-ஆ, 4-அ

(ஆ) 1-இ, 2-ஈ, 3-அ, 4-

(இ) 1-ஆ, 2-இ, 3-ஈ, 4-அ

(ஈ) 1-ஈ, 2-ஆ, 3-அ, 4-இ

05. பின்வருவனவற்றுள் சங்க இலக்கியம் அல்லாதது

(அ) இனிதெனத் தமியர் உண்டலும் இலரே

(ஆ) குரல் உணங்கு விதைத் தினை உரல் வாய்ப்பெய்து

(இ) கருங்கோட்டுச் சீறியாழ் பனையமிது கொண்டு ஈவதிலாளன்

(ஈ) பசி வரப் பத்தும் பறந்து போகும்

06.  பொருத்துக.

1. பெருங்கௌசிகனார் - (அ) நைடதம்

2. கி.ராஜநாராயணன் - (ஆ) காசிக்காண்டம்

3. அதிவீரராம பாண்டியன்  - (இ) கூத்தராற்றுப்படை

4. காசியின் சிறப்பு - (ஈ) கரிசல் இலக்கியம்

(அ) 1-இ, 2-அ, 3-ஈ, 4-ஆ

(ஆ) 1-அ, 2-ஆ, 3-ஈ, 4-இ

(இ) 1-, 2-, 3-அ, 4-ஆ

(ஈ)  1-ஆ, 2-இ, 3-ஆ, 4-ஈ

07. தமிழர் விருந்தோம்பலில் அடிப்படைப் பண்பு

(அ) ஈதற்கடன்

(ஆ) பகிர்ந்துண்ணல்

(இ) விருந்து படைத்தல்

(ஈ) மகிழ்ந்துண்ணல்

08. பொருத்துக.

1. மருந்தே ஆயினும் விருந்தொடு உண் - (அ) திருக்குறள்

2. மோப்பக் குழையும் அனிச்சம் - (ஆ) புறநானூறு

3. அமிழ்தம் இழைவதாயினும் இனிதுஎனத்தமியர் உண்டலும் இலரே - (இ) நற்றிணை

4. அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும் - (ஈ) கொன்றை வேந்தன்

(அ) 1-அ, 2-ஆ, 3-ஈ, 4-

(ஆ) 1-இ, 2-ஈ, 3-ஆ, 4-அ

(இ) 1-ஆ, 2-அ, 3-இ, 4-ஈ

(ஈ) 1-ஈ, 2-அ, 3-ஆ, 4-இ

09.  பின்வருவனவற்றுள் முறையான தொடர்

(அ) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு.

(ஆ) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு.

(இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு.

(ஈ) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு.

10. சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி” என்னும் அடியில் பாக்கம் என்பது

(அ) புத்தூர்

(ஆ) மூதூர்

(இ) பேரூர்

(ஈ) சிற்றூர்

விடைக்குறிப்பு

1 - இ

2 - இ

3 - ஆ

4 - அ

5 - ஈ

6 - ஈ

7 - இ

8 - ஈ

9 - இ

10 - ஈ

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்