TET & PG TRB - TAMIL ELIGIBILITY TEST
தேர்வு - 24
01. வழு என்பது ......................
(அ) இலக்கண முறையுடன் பிழையின்றிப் பேசுவது
(ஆ) இலக்கண முறையின்றிப் பிழையாகப் பேசுவது
(இ) இலக்கண முறைப்படி பிழையுடையதை பிழையன்று என ஏற்றுக்கொள்ளப்பட்டது.
(ஈ) இலக்கண முறையுடன் பிழையின்றி எழுதுவது
02. இலக்கணப் பிழைகள் இல்லாதிருப்பது
(அ) வழாநிலை
(ஆ) வழு
(இ) வழுவமைதி
(ஈ) இவற்றில் எதுவுமில்லை
03. “அமைச்சர் நாளை விழாவிற்கு வருகிறார்” இத்தொடரிலுள்ள வழுவமைதி
(அ) கால வழுவமைதி
(ஆ) மரபு வழுவமைதி
(இ) இட வழுவமைதி
(ஈ) திணை வழுவமைதி
04. படர்க்கை வினையைத் தேர்ந்தெடுக்க.
(அ) வந்தாய்
(ஆ) வந்தான்
(இ) வந்தேன்
(ஈ) வந்தீர்
05. பொருத்துக.
1. செழியன் வந்தது - (அ) இட வழு
2. கண்ணகி உண்டான் - (ஆ) கால வழு
3. நீ வந்தேன் - (இ) திணை வழு
4. நேற்று வருவான் - (ஈ) பால் வழு
(அ) 1-ஆ, 2-ஈ, 3-அ, 4-இ
(ஆ) 1-இ, 2-அ, 3-ஈ, 4-ஆ
(இ) 1-இ, 2-ஈ, 3-அ, 4-ஆ
(ஈ) 1-இ, 2-ஈ, 3-ஆ, 4-அ
06. பொருத்துக.
1. தன்மை - (அ) அவன்
2. முன்னிலை - (ஆ) நான்
3. படர்க்கை - (இ) நீ
(அ) 1-ஆ, 2-இ, 3-அ
(ஆ) 1-இ, 2-ஆ, 3-அ
(இ) 1-ஆ, 2-அ, 3-இ
(ஈ) 1-அ, 2-இ, 3-ஆ
07. குழந்தை அழுகிறான், பார் - வழுவை வழாநிலையாக மாற்றுக.
(அ) குழந்தை அழுகிறாள், பார்
(ஆ) குழந்தை அழுகிறது, பார்
(இ) குழந்தை அழுகிறார், பார்
(ஈ) குழந்தை அழுகிறான், பார்
08. பொருத்துக.
1. செழியன் வந்தான் - (அ) இட வழாநிலை
2. கண்ணகி உண்டாள் - (ஆ) கால வழாநிலை
3. நீ வந்தாய் - (இ) திணை வழாநிலை
4. நேற்று வந்தான் - (ஈ) பால் வழாநிலை
(அ) 1-ஆ, 2-ஈ, 3-அ, 4-இ
(ஆ) 1-இ, 2-அ, 3-ஈ, 4-ஆ
(இ) 1-இ, 2-ஈ, 3-அ, 4-ஆ
(ஈ) 1-இ, 2-ஈ, 3-ஆ, 4-அ
09. “கத்துங் குயிலோசை – சற்றே வந்து
காதிற் படவேணும்”
இவ்வடியிலுள்ள வழுவமைதி
(அ) கால வழுவமைதி
(ஆ) மரபு வழுவமைதி
(இ) இட வழுவமைதி
(ஈ) திணை வழுவமைதி
10. ஒரு விரலைக் காட்டி சிறியதோ? பெரியதோ? என்று கேட்டல் எவ்வகை வழு?
(அ) திணை வழு
(ஆ) வினா வழு
(இ) விடை வழு
(ஈ) மரபு வழு
11. பொருத்துக.
1. பறவைகள், குன்றுகள் - (அ) முன்னிலைப் பெயர்கள்
2. பெண்கள், குழந்தைகள் - (ஆ) அஃறிணைப் பலவின்பால்
3. படித்தனர், பறந்தன - (இ) படர்க்கை வினைகள்
4. நீங்கள், நீவிர் - (ஈ) உயர்திணைப் பலர்பால்
(அ) 1-ஆ, 2-ஈ, 3-அ, 4-இ
(ஆ) 1-இ, 2-அ, 3-ஈ, 4-ஆ
(இ) 1-இ, 2-ஈ, 3-அ, 4-ஆ
(ஈ) 1-ஆ, 2-ஈ, 3-இ, 4-அ
12. கண்ணன் எங்கே இருக்கிறார்? என்ற வினாவிற்குக் கண்ணாடி பைக்குள் இருக்கிறார் என்று விடையளித்தல் எவ்வகை வழு?
(அ) திணை வழு
(ஆ) வினா வழு
(இ) விடை வழு
(ஈ) மரபு வழு
விடைக்குறிப்பு
1 - ஆ
2 - அ
3 - அ
4 - ஆ
5 - இ
6 - அ
7 - ஆ
8 - இ
9 - ஆ
10 - ஆ
11 - ஈ
12 - இ
கருத்துகள்
கருத்துரையிடுக