TET & PG TRB - TAMIL ELIGIBILITY TEST
01. E-Mail – இச்சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல்
(அ) புலனம்
(ஆ) சிற்றிகை
(இ) மின்னஞ்சல்
(ஈ) தொலைநகல்
02. பெருமாள்
திருமொழியில் வரும் ‘வித்துவக்கோடு’ என்னும் ஊர் அமைந்துள்ள மாநிலம் எது?
(அ) தமிழ்நாடு
(ஆ) கேரளா
(இ) கர்நாடகம்
(ஈ) ஆந்திரா
03. தென்னை மரங்கள் உள்ள பகுதியைத்
தென்னந்தோட்டம் என்று கூறுதல் ............... வழு.
(அ) திணை வழு
(ஆ) வினா வழு
(இ) விடை வழு
(ஈ) மரபு வழு
04. ‘உனதருளே பார்ப்பேன் அடியேனே’ - யாரிடம் யார் கூறியது?
(அ) குலசேகராழ்வாரிடம்
இறைவன்
(ஆ) இறைவனிடம்
குலசேகராழ்வார்
(இ) மருத்துவரிடம்
நோயாளி
(ஈ) நோயாளிடம்
மருத்துவர்
05.
‘மீளாத் துயர்’ – இலக்கணக்குறிப்பு தருக.
(அ) வினையாலணையும்
பெயர்
(ஆ) வினையெச்சம்
(இ) பெயரெச்சம்
(ஈ) ஈறுகெட்ட
எதிர்மறைப் பெயரெச்சம்
06.
தலைப்புக்கும் குறிப்புக்கும் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.
தலைப்பு:
செயற்கை நுண்ணறிவு
குறிப்புகள்:
கண்காணிப்புக் கருவி, அசைவு நிகழும்
பக்கம் தன் பார்வையைத் திருப்புகிறது. திறன்பேசியில் உள்ள வரைபடம்
போக்குவரத்திற்குச் சுருக்கமான வழியைக் காண்பிப்பது.
(அ) தலைப்புக்குப்
பொருத்தமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
(ஆ) குறிப்புகளுக்குத்
தொடர்பில்லாத தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
(இ) தலைப்புக்குத்
தொடர்பில்லாத குறிப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.
(ஈ) குறிப்புகளுக்குப்
பொருத்தமில்லாத தலைப்பு வழங்கப்பட்டுள்ளது.
07.
‘தண்பெயல்’ பொருள் தருக.
(அ) நிறை
வெள்ளம்
(ஆ) வெள்ளக்
காடு
(இ) குளிர்ந்த
மழை
(ஈ) பெருமழை
08.
ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற வீரர்கள் நாளை இந்தியா வருகிறார்கள் என்பது ................. வழுவமைதி
(அ) பால்
(ஆ) திணை
(இ) கால
(ஈ) மரபு
09.
”இந்த மாறன் ஒருநாளும் பொய் கூறமாட்டான்” என்று மாறனே கூறுவது .............
வழுவமைதி.
(அ) பால்
(ஆ) இட
(இ) கால
(ஈ) மரபு
10.
குலசேகர ஆழ்வார் ‘வித்துவக்கோட்டம்மா’
என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார்.
பூனையார்
பால்சோற்றைக் கண்டதும் வருகிறார்.
ஆகிய
தொடர்களில் இடம்பெற்றுள்ள வழுவமைதி முறையே
(அ) மரபு
வழுவமைதி,
திணை வழுவமைதி
(ஆ) இட
வழுவமைதி,
மரபு வழுவமைதி
(இ) பால்
வழுவமைதி,
திணை வழுவமைதி
(ஈ) கால
வழுவமைதி,
இட வழுவமைதி
11.
பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?
(அ) துலா
(ஆ) சீலா
(இ) குலா
(ஈ) இலா
12.
”என் அம்மை வந்தாள்” என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது .............. வழுவமைதி.
(அ) திணை
(ஆ) இட
(இ) கால
(ஈ) மரபு
விடைக்குறிப்பு
1 - இ
2- ஆ
3 - ஈ
4 - ஆ
5 - அ
6 - அ
7 - இ
8 - இ
9 - ஆ
10 - இ
11 - ஈ
12 - அ
கருத்துகள்
கருத்துரையிடுக