TET & PG TRB - TAMIL ELIGIBILITY TEST
தேர்வு - 35
01. திரௌபதி அம்மன் வழிபாட்டின் ஒரு பகுதியாக இருப்பது
(அ) காவடியாட்டம்
(ஆ) தெருக்கூத்து
(இ) தேவராட்டம்
(ஈ) கலையாட்டம்
02. அருச்சுணன் தபசு என்பது ................. வேண்டி நிகழ்த்தப்படும்
தெருக்கூத்தாகும்.
(அ) அருள்
(ஆ) வீரம்
(இ) செல்வம்
(ஈ) மழை
03. கையுறைப் பாவைக் கூத்தாகவும் பொம்மலாட்டமாகவும் மாற்றம்
பெற்ற கலை
(அ) காவடியாட்டம்
(ஆ) தேவராட்டம்
(இ) தோற்பாவைக் கூத்து
(ஈ) புலியாட்டம்
04. தோற்பாவைக் கூத்து பற்றிய செய்திகளைக் கூறும் இலக்கியம்
(அ) திருக்குறள்
(ஆ) திருவாசகம்
(இ) பட்டினத்தார் பாடல்கள்
(ஈ) இவை மூன்றும்
05. இராஜராஜசோழனின் பெருமையைப் பறைசாற்றும் விதமாக ‘இராச சோழன்
தெரு’ அமைந்துள்ள நாடு
(அ) மலேசியா
(ஆ) சிங்கப்பூர்
(இ) இலங்கை
(ஈ) சீனா
06. கவிஞர் உமாமகேஸ்வரியின் படைப்புகளுள் பொருந்தாதவற்றைத்
தெரிவு செய்க.
(அ) நட்சத்திரங்களின் நடுவே
(ஆ) வெறும் பொழுது
(இ) கற்பாவை
(ஈ) தேன்மழை
07. பிள்ளைத்தமிழின் இலக்கிய வகை
(அ) சங்க இலக்கியம்
(ஆ) நீதி
(இ) சிற்றிலக்கியம்
(ஈ) காப்பியம்
08. சிற்றிலக்கிய வகைகள்
(அ) 12
(ஆ) 96
(இ) 30
(ஈ) 63
09. பிள்ளைத் தமிழின் பாட்டுடைத் தலைவன்
(அ) இறைவன்
(ஆ) தலைவன்
(இ) அரசன்
(ஈ) இம்மூன்றும்
10. பிள்ளைத்தமிழ் பருவங்களும் பாடல்களும் எத்தனை?
(அ) 10, 100
(ஆ) 3, 133
(இ) 10, 50
(ஈ) 6, 150
11. குமரகுருபரரின் காலம்
(அ) 12 ஆம் நூற்றாண்டு
(ஆ) 10 ஆம் நூற்றாண்டு
(இ) 2 ஆம் நூற்றாண்டு
(ஈ) 17 ஆம் நூற்றாண்டு
12. பெண்பாற் பிள்ளைத்தமிழ்ப் பருவங்களில் பொருந்தாதது
(அ) காப்பு
(ஆ) தால்
(இ) அம்மானை
(ஈ) சிறுதேர்
13. ஆண்பாற் பிள்ளைத்தமிழ்ப் பருவங்களில் பொருந்தாதது
(அ) செங்கீரை
(ஆ) முத்தம்
(இ) சிறுபறை
(ஈ) ஊசல்
14. பிள்ளைத்தமிழில் ஒரு பருவத்திற்கு எத்தனை பாடல்கள்?
(அ) 100
(ஆ) 20
(இ) 5
(ஈ) 10
15. ‘ஆடுக’ இலக்கணக் குறிப்பு தருக.
(அ) வினைத்தொகை
(ஆ) பண்புத்தொகை
(இ) வியங்கோள் வினைமுற்று விகுதி
(ஈ) சொல்லிசை அளபெடை
விடைக்குறிப்பு
1 - ஆ
2 - ஈ
3 - இ
4 - ஈ
5 - அ
6 - ஈ
7 - இ
8 - ஆ
9 - ஈ
10 - அ
11 - ஈ
12 - ஈ
13 - ஈ
14 - ஈ
15 - இ
கருத்துகள்
கருத்துரையிடுக